இந்த கிழி கிழிக்குறாங்களே எந்த ஊரா இருக்கும்? நடுரோட்டில் பெண் பேசிய பீப் வார்தைகளால் பதறிய இளைஞர்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனத்திற்கு வாங்கிய கடன் தவணையை செலுத்தவில்லை என கூறி இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய வந்த இளைஞர்களை ஆபாச பேச்சால் வசைபாடிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சிக்ராம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் நிதி நிறுவனத்தில் தனது இருசக்கர வாகனத்திற்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
பல மாதங்கள் ஆகியும் மாதம்தோறும் கடன் தவணையை கட்டாததால் இன்று அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர்

பைனான்ஸ் ஊழியர்கள்
அந்தப் பெண்ணிடம் தங்களது இரு சக்கர வாகனத்தின் ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க என்று கூறியுள்ளனர். அவர் தனது வீட்டிற்குள் சென்று ஆவணங்களை எடுத்து வருவதற்குள் அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த இளைஞர்கள் சென்றுவிட்டனர். ஒரு இளைஞர் அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுவிட மற்றொரு இளைஞர் அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை அந்தப் பெண் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் பின்னால் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

சாலையில் அடாவடி
வேடசந்தூர் அரசு மருத்துவமனை அருகே அவரை பிடித்து நீங்கள் யார் எதற்காக இரு சக்கர வாகனத்தை திருடி சென்றீர்கள் என்று கேட்டபோது சில மாதங்களாக மாதத் தவணை கட்டத் தவறியதாகவும், நிறுவனத்திலிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்து வரக் கூறினார்கள் என்றும் அதனால்தான் எடுத்துச் சென்றோம் என்றும் தெரிவித்துள்ளார். உங்களது அடையாள அட்டையை காண்பிக்குமாறு அந்தப்பெண் கூறியுள்ளார். அதற்கு நான் இந்த நிறுவனத்தில் புதிதாக சேர்ந்து உள்ளேன் ஆகையால் என்னிடம் அடையாளம் அட்டை இல்லை எனவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

ஆபாச வார்த்தைகளால் வசை
இதற்கு அந்தப் பெண் நீ யார் என்று எனக்கு தெரியாது எப்படி என் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லலாம் என அந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் பேசி வசை பாடினார். சாலை என்று கூட பாராமல் அந்த இளைஞரை கடுமையாக தகாத வார்த்தைகளால் பேசிய அந்தப் பெண் அந்த இளைஞரின் கைப்பேசியை பிடுங்கி வைத்துக் கொண்டார் பின்பு அந்தப் பெண்ணுடன் வந்த அவரது உறவினர்கள் அந்த இளைஞரை தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்

வீடியோ வைரல்
அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு சென்ற அவர்கள் இவனை விடக்கூடாது என்று கூறிக் கொண்டே வாடா எங்க வீட்டுக்கு என்று அழைத்து சென்றனர். மேலும் சாலையின் நடுவே ஒரு இளைஞரை ஆபாச வார்த்தைகளால் பேசியும் தகாத வார்த்தைகளால் திட்டியும் ஒருபெண் சண்டையிட்டது அப்பகுதியில் சென்ற பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications