வாட்டி வதைக்கும் பொருளாதார நெருக்கடி! ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கும் அரேபியர்கள்! அதிர்ச்சி சர்வே
துபாய்: மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்காவில் உள்ள 9 நாடுகள் மற்றும் பாலஸ்தீன பிரதேசங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழும் அரேபியர்கள் உள்பட அனைத்து மக்களும் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி சர்வே வெளியாகி உள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதுதொடர்பாக லெபனான், சூடான், துனிசியா, ஜோர்டான், ஈராக், லிபியா, மவுரிட்டானியா, மொராக்கோ, எகிப்து ஆகிய 9 நாடுகளிலும் பாலஸ்தீன பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தை மையமாக கொண்ட Arab Barometer எனும் ஆராய்ச்சி அமைப்பானது 2006ம் ஆண்டு முதல் பல்வேறு சர்வேக்களை செய்து வருகிறது. இந்த அமைப்பு தான் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நாடுகளில் மொத்தம் 22,765 பேரை நேரடியாக நேர்க்காணல் செய்துள்ளது.

2021 முதல் சர்வே
இதற்கு பல வளைகுடா அரசுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால் சிரியாவில் சர்வே மேற்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு நாட்டின் சட்டம், கலாச்சார காரணங்களுக்காக சில கேள்விகள் கைவிடப்பட்டன. 2021ம் ஆண்டில் பிற்பகுதியில் இருந்து 2022 வசந்தகாலம் வரை சர்வே நடத்தப்பட்டது. பல்கலைக்கழகங்கள் மற்றும் வாக்கெடுப்புகளை நடத்தும் அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

பொருளாதாரம் பலவீனம்
இதில் தற்போதைய ஜனநாயகத்தின் கீழ் பொருளாதாரம் பலவீனமாக உள்ளது என பெரும்பாலானோர் ஏற்று கொண்டனர். இதுபற்றி அதன் இயக்குனர் மைக்கேல் ராபின்ஸ் கூறுகையில், ‛‛கடந்த 2018-19 சர்வேயை ஒப்பிடும்போது இது முற்றிலும் மாறியுள்ளது. ஜனநாயகம் என்பது அரசாங்கத்தின் சரியான வடிவம் அல்ல. அது எல்லாவற்றையும் சரி செய்யாது என கூறும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் பட்டினி கிடக்கின்றனர். மக்களுக்கு ரொட்டி தேவையாக உள்ளது. மக்கள்தற்போதைய அமைப்பினால் விரக்தி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது'' என்றார்.

பாதிக்கும் அதிகமானவர்கள்...
மேலும் சர்வே நடத்தப்பட்ட நாடுகளில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் ஜனநாயக அமைப்பின் கீழ் பொருளாதாரம் பலவீனமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் தங்கள் நாட்டு அரசின் கொள்கைகளின் செயல்திறனை காட்டிலும் அரசாங்கத்தின் செயல்பாடு மீது அதிக அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு?
ஜனநாயக அமைப்பின் கீழ் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதை ஒப்புக்கொண்ட மக்களின் எண்ணிக்கையானது 2018-19 சர்வே முடிவுகளை ஒப்பிடும்போது தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி 2018-19 சர்வேயில் ஈராக்கில் 50 சதவீதமாக இருந்த அளவு தற்போது 75 சதவீதமாகவும், துனிசியாவில் 35 சதவீதமாக இருந்தது தற்போது 70 சதவீதத்துக்கு அதிகமாகவும், பாலஸ்தீன பிரதேசங்களில் 30 சதவீதமாக இருந்தது தற்போது 60 சதவீதமாகவும், லிபியாவில் 30 சதவீதமாக இருந்தது தற்போது 55 சதவீதத்துக்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது. ஜோர்டானில் 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகவும், லெபனானில் 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதத்துக்கு அதிகமாகவும், சூடானில் 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகவும், மொராக்கோவில் 10 சதவீத்தில் இருந்து 45 சதவீதமாகவும் ஜனநாயக அமைப்பின் கீழ் பொருளாதாரம் பலவீனமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கொள்கையை விட பயனே வேண்டும்
மேலும் அரசின் கொள்கை முடிவுகளை விட அதன் பயனை வழங்கும் அரசை மக்கள் விரும்புகின்றனர். இதுதொடர்பான கேள்விக்கு ஈராக்கில் 79 சதவீதமாகவும், துனிசியா, லிபியாவில் தலா 77 சதவீதமாகவும், ஜோர்டானில் 76 சதவீதம், மவ்ரிடானியாவில் 73 சதவீதம், லெபனானில் 69 சதவீதம், எகிப்தில் 66 சதவீதம், பாலஸ்தீனிய பிரதேசம் மற்றும் மொராக்கோவில் தலா 62 சதவீதமாகவும், சூடானில் 61 சதவீதத்தினரும் ஆதரவு அளித்துள்ளனர்.

விதிகளை வளைக்கும் தலைவர்கள்
மேலும் EIU ஜனநாயக குறியீட்டின்படி, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா நாடுகள் தரவரிசையில் பின்தங்கி உள்ளன. இஸ்ரேல் நாடு ஜனநாயக குறைபாடு உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. துனிசியா மற்றும் மொராக்கோ ஆகியவை "hybrid ஆட்சி" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிற நாடுகள் "சர்வாதிகாரம்" என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தற்போதைய Arab Barometer சர்வேயின்படி 7 நாடுகள் மற்றும் பாலஸ்தீன பிரதேசங்களில் தங்கள் நாட்டுக்காக விதிகளை வளைக்கும் தலைவர் வேண்டும் என்பதில் உடன்பட்டுள்ளனர். நாடுகள் வாரியாக பார்க்கும்போது விதிகளை வளைக்கும் தலைவர்கள் வேண்டும் என்ற கேள்விக்கு ஈராக்கில் 87 சதவீதம் ஓகே கூறினார். இது துனிசியாவில் 81 சதவீதம், லெபனானில் 73 சவீதம், லிபியாவில் 71 சதவீதம், மவ்ரிடானியாவில் 63 சதவீதம், சூடானில் 61 சதவீதம், ஜோர்டானில் 53 சதவீதம், பாலஸ்தீன பகுதிகளில் 51 சதவீதம், மொராக்கோவில் 48 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்த கேள்வி எகிப்தில் கேட்கப்படவில்லை.

துனிசியாவில் அரசு கவிழ்ப்பு ஆதரவு
இதன்மூலம் மொராக்கோவில் மட்டுமே பாதிக்கும் குறைவானவர்கள் அதனை ஏற்கவில்லை. இருப்பினும் இது பாலஸ்தீன பகுதி, ஜோர்டான், சூடானில் 50க்கு 50 என்ற அளவில் உள்ளது. இது துனிசியாவை பொறுத்தமட்டில் 10ல் 8 பேர் உடன்படுகின்றனர். 10ல் ஒன்பது பேர் அரசாங்கத்தை கலைக்க வேண்டும் எனும் ஜனாதிபதி சையத்தின் முடிவுக்கு உடன்படுகின்றனர். இதன்மூலம் ஜனாதிபதி சையத்துக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கலாம் என நம்பப்படுகிறது. இதுபற்றி Arab Barometer இணை நிறுவனர் அமானே ஜமால் கூறுகையில், ‛‛ இப்போது, துரதிர்ஷ்டவசமாக, துனிசியா சர்வாதிகாரம் நோக்கி திரும்ப வாய்ப்புள்ளது. ஏனென்றால் துனியசியாவில் ஜனநாயக ரீதியாக பொருளாதாரம் தே்ாவியடைந்துள்ளது என்பது நம்பிக்கையாக உள்ளது'' என கூறியுள்ளார்.

பொருளாதாரமே பெரும் பிரச்சனை
மேலும் நாட்டின் தற்போதைய சூழலில் பொருளாதார நிலை தான் பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. அதாவது நாட்டில் பொருளாதார நிலை, ஊழல், நிலையற்ற தன்மை, கொரோனா ஆகியவற்றில் பெரிய பிரச்சனையாக எது உள்ளது? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜோர்டான் நாட்டில் 63 சதவீதம் பேர் பொருளாதாதாரம் தான் என பதிலளித்துள்ளனர். லெபனானை பொறுத்தவரை 48 சதவீதம் பொருளாதாரம் எனவும், 23 சதவீதம் ஊழல் எனவும் தெரிவித்தனர். எகிப்தில் பொருளாதார நிலை என 47 சதவீதம் பேரும், 41 சதவீதம் பேர் கொரோனா என வும் பதிலளித்துள்ளனர். துனிசியாவில் பொருளாதாரம் என 39 சதவீதம் பேரும், ஊழல் என 28 சதவீதம் பேரும் தெரிவித்த நிலையில் மவ்ரிடானியாவில் 35 சதவீதம் பேர், எனவும், மொராக்கோவில் 33 சதவீதம், சூடானில் 32 சதவீதம், பாலஸ்தீனியா பகுதிகளில் வசிப்போம் 31 சதவீதம் பொருளாதாரம் என பதிலளித்துள்ளனர். ஈராக்கில் ஊழல் தான் பிரச்சனையாக இருப்பதாக 26 சதவீதம் பேர் கூறியுள்ளனர். லிபியாவில் 21 சதவீதம் பேர் ஊழல் எனவும் 23 சதவீதம் பேர் நிலையற்ற தன்மை எனவும் பதிலளித்துள்ளனர்.

உணவுக்கு பணமில்லை
மேலும் சர்வே எடுக்கப்பட்ட நாடுகளில் 3 பேரில் ஒருவருக்கு கூடுதலாக உணவு வாங்க பணம் இல்லாத நிலை உள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு எகிப்தி்ல 68 சதவீதம், மவ்ரிட்டானியாவில் 65 சதவீதம், சூடானில் 63 சதவீதம், ஈராக்கில் 57 சதவீதம், துனிசியாவில் 55 சதவீதம், லிபியாவில் 53 சவீம், லெ பனானில் 48 சதவீதம், ஜோர்டானில் 48 சதவீதம், மொராக்கோவில் 36 சதவீதம், பாலஸ்தீன பகுதிகளில் 34 சதவீதம் பேர் உடன்பட்டுள்ளனர். மேலும் இந்த சர்வேயானது பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு முன்பாக எடுக்கப்பட்டது. இதனால தற்போது உணவு தொடர்பான பிரச்சனை இன்னும் அதிகரித்து இருக்கலாம். ஏனென்றால் எகிப்து, லிபியா மற்றும் துனிசியா நாடுகள் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் கோதுமை ஏற்றுமதியை தான் அதிகம் நம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லெபனான் மிகவும் மோசம்
மேலும் நாடுகளின் பொருளாதார நிலை மேம்பாடு குறித்த கேள்விக்கு தற்போது நிலை சிறப்பாக உள்ளது என லெ பனானில் 0.5 சதவீதம் பேரும், சூடானில் 13 சதவீதம் பேரும், துனிசியாவில் 14 சதவீதம், ஜோர்டானில் 15 சதவீதம், ஈராக்கில் 26 சதவீதம், பாலஸ்தீன பகுதிகளில் 30 சதவீதகள், லிபியாவில் 29 சதவீதம், மவுரிட்டானியா, மொராக்கோவில் தலா 33 சதவீதம், எகிப்தில் 45 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எந்த நாடுகளிலும் இந்த சதவீதம் 50யை கடக்கவில்லை. இருப்பினும் பொருளாதார நிலை ்டுத்த 2-3 ஆண்டுகளில் வளர்ச்சியடையும் என லெபனானில் 17 சதவீதம், சூடானில் 35 சதவீதம், துனிசியாவில் 61 சதவீதம், ஜோர்டானில் 24 சதவீதம் பேர், ஈராக், பாலஸ்தீன பகுதிகளில் தலா 29 சதவீதம், லிபியாவில் 43 சதவீதம், மவுரிட்டானியாவில் 49 சதவீதம், மொராக்கோவில் 42 சதவீதம், எக்ப்தில் 50 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலக வங்கியை எதிரொலித்த சர்வே
இந்த நாடுகளில் லெபனானில் பொருளாதார பிரச்சனை என்பது 19ம் நூற்றாண்டில் மிகவும் மோசமாக இருப்பதாக ஏற்கனவே உலக வங்கி தெரிவித்து உள்ளது. இதனை தான் இந்த சர்வேயும் பிரதிபலிக்கிறது. அதன்படி தற்போதைய பொருளாதாரம் நன்றாக உள்ளது என வெறும் 0.5 சதவீதத்தின் மட்டுமே கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications