மேட்ச் வென்றது இருக்கட்டும்! நடுவில் நடந்த "இந்த" விஷயத்தை நோட் பண்ணீங்களா? தமிழ்நாடு ஜாம்பவானா இது?
துபாய்: இந்தியா பாகிஸ்தானுக்கு இடையிலான ஆசிய கோப்பை டி 20 தொடரில் நேற்று நடந்த சம்பவம் ஒன்று இந்திய ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.
கடைசி நொடி வரை திக் திக்.. பாகிஸ்தான் பவுலர்களின் மிரட்டல் பவுலிங்.. ஹர்திக் பாண்டியாவின் கூல் பேட்டிங் என்று இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் சிறப்பாக முடிந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடைசி வரை நடந்த திக் திக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியது.
நேற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 147 ரன்கள் எடுத்து 19.5 ஓவரில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் கோலி 35, ஜடேஜா 35, ஹர்திக் பாண்டியா 33 என்று அதிரடியாக ரன்களை குவிக்க.. இந்திய அணி 19.4 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் ஆசிய கோப்பை 2022 தொடரை இந்திய அணி வெற்றியோடு தொடங்கி உள்ளது.

இந்திய அணி வெற்றி
நேற்று போட்டியில் இந்திய அணி வென்றாலும் போட்டிக்கு இடையே நடைபெற்ற விஷயம் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. முக்கியமாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக பவுலிங் செய்தார். நேற்று ரிஸ்வான், இப்திகார், குஷ்தில் என்று 3 பெரிய விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோல் புவனேஷ்வர் குமார் இன்னும் சிறப்பாக பவுலிங் செய்தார்.

விக்கெட்
4 ஓவரில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். பாபர், ஆசிப் அலி, நசீம் ஷா, ஷதாப் கான் ஆகியோர் விக்கெட்டுகளை எடுத்து அணியில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது புவனேஷ்வர் குமார்தான். இன்னொரு அர்ஷிதீப் சிங்கும் 3.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதேபோல் ஆவேஷ் கானும் 1 விக்கெட் எடுத்தார். ஜடேஜா 2 ஓவர் மட்டுமே வீசினாலும் பெரிதாக ரன் கொடுக்கவில்லை. ஆனால் சாஹல் மட்டும் சொதப்பலாக பவுலிங் செய்தார்.

பவுன்ஸ்
பிட்ச் நன்றாக பவுன்ஸ் ஆனாலும் அதை சாஹல் சரியாக பயன்படுத்தவில்லை. 4 ஓவர் வீசிய சாஹல் 32 ரன்களை கொடுத்தார். நேற்றைய போட்டியில் சாஹலுக்கு பதில் அஸ்வினை எடுத்து இருக்கலாம் என்று ரசிகர்கள் பலர் போட்டிக்கு பின் கருத்து தெரிவித்தனர். ஆனால் ஆட்டத்திற்கு நடுவே நேற்று அஸ்வின் ட்ரிங்ஸ் கொடுத்தார். இந்திய வீரர்கள் பேட்டிங் செய்த போது அஸ்வின்தான் அவர்களுக்கு குளிர்பானங்கள் கொடுத்தார்.

அஸ்வின் எங்கே
இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. சீனியர் வீரர் ஒருவர் இப்படி எதை பற்றியும் யோசிக்காமல் கூல் ட்ரிங்ஸ் கொடுத்தது பெரிய அளவில் கவனம் பெற்றது. அஸ்வினா இது என்று பலரும் உற்று உற்று மைதானத்தில் பார்த்தனர். ஆனால் இது போன்ற போட்டிகளில் பொதுவாக சீனியர் வீரர்களே ட்ரிங்ஸ் கொடுப்பார்கள். வீரர்களுக்கு சீனியர் வீரர்கள் அறிவுரை வழங்க முடியும். பயிற்சி குழு சொல்வதை சீனியர் வீரர்கள்தான் சரியாக பேட்ஸ்மேன்களுக்கு கடத்துவார்கள். அதனால் நேற்று அஸ்வின்தான் ட்ரிங்ஸ் கொடுக்க பயன்படுத்தப்பட்டார்.












Click it and Unblock the Notifications