ரூ.12.5 லட்சம் கல்யாண பரிசு.. அள்ளி தரும் துபாய் கோடீஸ்வரர்.. குழந்தை பெற்றால் 2 மடங்கு அதிகரிப்பு
துபாய்: தனது நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞர்கள் அல்லது இளம்பெண்கள் இந்தாண்டு கல்யாணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ரூ.12.5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக துபாய் கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார். மேலும், குழந்தை பெற்றுக் கொண்டால் இந்த நிதியுதவி இரட்டிப்பாக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமீரகத்தில் உள்ள முக்கிய நகரம் துபாய். மத்தியக் கிழக்கின் பொருளாதார மையாக இது உருவெடுத்து வருகிறது. துபாயைச் சேர்ந்த கோடீஸ்வரரும் அல் ஹப்தூர் குழுமத்தின் தலைவருமான கலஃப் அஹ்மத் அல் ஹப்தூர் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரூ. 12.5 லட்சம்
அதாவது இந்த ஆண்டு திருமணம் செய்யவிருக்கும் எமிராட்டி ஊழியர்களுக்கு 50,000 திர்ஹம்கள், அதாவது சுமார் ₹12.5 லட்சம் திருமணப் பரிசாக வழங்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரக இளைஞர்களைத் திருமணம் செய்வதை ஊக்குவிப்பதே இந்த மானியத்தின் முக்கிய நோக்கமாகும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது அவரது நிறுவனத்தில் வேலை செய்யும் எல்லா ஊழியர்களுக்கும் இந்த ஊக்கத்தொகை கிடைக்காது. எமிராட்டி ஊழியர்கள், அதாவது அமீரக குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
அமீரகத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வேலை செய்தாலும் கூட உண்மையான எமிராட்டிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாகவே அதை ஊக்குவிக்க இப்படியொரு திட்டத்தை அறிவித்துள்ளார். அதிலும் திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெற்றுக் கொண்டால் இந்த நிதியுதவி இரு மடங்காக உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
என்ன காரணம்!
மேலும், கல்யாணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதன் அவசியத்தையும் அல் ஹப்தூர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வலியுறுத்தினார். திருமணம் மற்றும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு மட்டுமல்ல.. அது சமூக மற்றும் தேசியக் கடமை எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு நாடு தொடர்ந்து வளர்ச்சி அடையவும் சமூகங்கள் நிலைத்திருக்கவும் இவை தேவை என்றும் தெரிவித்துள்ளார்..
அமீரகத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க அந்நாட்டு அரசு ஏற்கனவே பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இருந்த போதிலும், திருமணம் மற்றும் குழந்தைகள் பெறுவதை ஊக்குவிக்கும் முன்னெடுப்புகள் அனைவரிடமிருந்தும் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அறிவிப்பு
இது தொடர்பாக அவர் தனது பதிவில், "இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும் அல் ஹப்தூர் குழுமத்தில் பணிபுரியும் ஒவ்வொரு எமிராட்டி இளைஞர் அல்லது இளம்பெண்ணுக்கும் ஐம்பது ஆயிரம் திர்ஹம்கள் நிதி உதவி வழங்குவேன். மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் குழந்தை பிறந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த உதவி இரட்டிப்பாக்கப்படும்" என்று உறுதியளித்தார்.
குடும்பங்களின் அசைக்க முடியாத முக்கியத்துவம் குறித்து தனக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த உதவித் திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வலுவான குடும்பமே ஒன்றிணைந்த சமூகத்தையும், அதுவே வலிமையான தேசத்தையும் உருவாக்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.
யார் இவர்?
இந்த கலஃப் அஹ்மத் அல் ஹப்தூர், அல் ஹப்தூர் குழுமம் மற்றும் துபாய் தேசியக் காப்பீடு நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் துபாய் வணிக வங்கியின் முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார். முன்னதாக அல் ஜலீலா அறக்கட்டளையின் அறங்காவலர் குழுமத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். 1994 முதல் 1997 வரை, அமெரிக்க யுனைடெட் சர்வீசஸ் ஆர்கனைசேஷனின் (உலக ஆளுநர் வாரியத்தின் அமெரிக்கர் அல்லாத ஒரே உறுப்பினராக அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications