இந்தியா vs பாகிஸ்தான்: அடித்து தூக்கிய அஸ்வின்.. வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கம்மி
துபாய்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான, 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, வருண் சக்கரவர்த்திக்கு பதில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடினார் அஸ்வின். ஆரம்பத்தில் பெரிதாக பந்துகள் எடுபடவில்லை. ஆனால், எலிமினேட்டர் சுற்றில், கொல்கத்தாவிற்கு எதிராக இவர் வீசிய கடைசி ஓவர் கதிகலங்க வைத்தது. போட்டியை டெல்லி பக்கம் கொண்டு வந்தது முதல் 4 பந்துகள். 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆனால் 5வது பந்து சிக்சருக்கு சென்றதால் டெல்லியால் வெற்றி பெற முடியவில்லை.
டென்ஷனான அந்த காலகட்டத்தில் அஸ்வின் சிறப்பாக செயல்பட்டார்.

அஸ்வின் சிறப்பு
இந்த நிலையில்தான், 20 ஓவர் உலக கோப்பை போட்டித் தொடரில் பங்கேற்க சென்ற அஸ்வின், இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார். 4 ஓவருக்கு 23 ரன்கள் மட்டுமே கொடுத்தார் அஸ்வின். இதோ இன்று.. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஓவரின்போது வார்னர், மார்ஷ் ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பந்துகளில் வீழ்த்தினார் அஸ்வின். அஸ்வின் அனுபவ வீரர். தற்போது நல்ல ஃபார்முக்கும் வந்து விட்டார்.

இந்தியா, பாகிஸ்தான் போட்டி
எனவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 24ம் தேதி மோத உள்ள உலக கோப்பை போட்டியின்போது அஸ்வின் இந்திய ஸ்பின்னராக களம் காணும் வாய்ப்பு உள்ளது. ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, அவருக்கு ஜோடி ஸ்பின்னராக செயல்படுவார்.

வருண் சக்கரவர்த்தி பவுலிங்
தமிழகத்தைச் சேர்ந்தவரான வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார். அவரும் உலக கோப்பை அணியில் தேர்வாகியுள்ளார். கொல்கத்தாவுக்கு சீசன் முழுக்க சிறப்பாக பந்து வீசியவர் வருண் சக்கரவர்த்தி. மிக குறைவாகத்தான் ரன்களை கொடுத்து வந்தார். சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இரு பவுலர்களும்தான் கொல்கத்தாவின் தூண்களாக இருந்தனர்.
Recommended Video

அஸ்வின் சீனியர்
வருண் சக்கரவர்த்திக்கு, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அஸ்வின் சீனியர், உலக கோப்பை போட்டி அதுவும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பது பதற்றம் தரக் கூடியது. எனவே அதுபோன்ற போட்டிகளில் புது முகத்தை விட சீனியர்கள் களம் காண்வது நல்லது என்ற எண்ணம் அணி நிர்வாகத்திற்கு இருக்கிறது. எனவே வருண் சக்கரவர்த்திக்கு உடனடியாக வாய்ப்பு கிடைப்பது சிரமம் என்கிறார்கள் பிசிசிஐ வட்டாரத்தில்.
-
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications