துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிங்க் "தாமரை".. 16 சாமிகள்.. துபாயில் திறக்கப்படும் மாபெரும் இந்து கோவில்.. நெகிழ்ச்சியான பக்தர்கள்

Google Oneindia Tamil News

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் கட்டப்பட்டு இருக்கும் பிரம்மாண்ட இந்து கோவில் ஒன்று தசராவை முன்னிட்டு திறக்கப்பட உள்ளது. இன்று மாலை இதற்கான திறப்பு விழா நடத்தப்படவுள்ளது.

துபாயின் ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்திய தூதர் சுஜாய சுதீர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.

துபாயில் கட்டப்பட்டு உள்ள பிரம்மாண்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும். கொரோனா காலத்தில் துபாயில் நிறைய கட்டிடங்கள் கட்ட அனுமதிகள் வழங்கப்படவில்லை.

கொரோனாவை காரணம் காட்டி பல கட்டிடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இன்பநிதி மேற்படிப்பு, கால்பந்தாட்டம்.. குடும்பத்துடன் துபாய் புறப்பட்டுச் சென்ற உதயநிதி ஸ்டாலின்! இன்பநிதி மேற்படிப்பு, கால்பந்தாட்டம்.. குடும்பத்துடன் துபாய் புறப்பட்டுச் சென்ற உதயநிதி ஸ்டாலின்!

துபாய்

துபாய்

ஆனால் இந்த இந்து கோவிலுக்கு மட்டுமே துபாயில் உடனே அனுமதி வழங்கப்பட்டது. கொரோனா உச்சத்தில் இருக்கும் போது கூட அரசின் முழு ஆதரவோடு இங்கு கோவில் கட்டுமானம் சிக்கல் இன்றி நடைபெற்றது. 2019ல் இந்த கோவில் கட்டுவதற்கான நிலம் அரசிடம் இருந்து பெறப்பட்டது. மிகவும் வித்தியாசமான முறையில், நேர்த்தியமாக, பிரம்மாண்டமாக இந்த கோவில் கட்டப்பட்டு உள்ளது. 80 ஆயிரம் சதுர அடியில் இந்த இந்து கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.

 கோவில்

கோவில்

துபாயில் இருக்கும் ஜேபேல் அலி எனப்படும் பகுதியில் இந்த கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால், இதில் மொத்தம் 16 கடவுள்கள் உள்ளனர். சிவன், கிருஷ்ணா, கணபதி, மகாலட்சுமி உள்ளிட்ட 16 கடவுள்களுக்கு தனி தனியாக தலங்கள் உள்ளே அமைந்து உள்ளன. குரு கிரந்த சாஹிப் சிலையும் உள்ள அமைக்கப்பட்டு உள்ளது. 105 காப்பர் மணிகள் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் பிங்க் வண்ணத்தில் மாபெரும் தாமரை இங்கே அமைக்கப்பட்டு உள்ளது.

16 சிலைகள்

16 சிலைகள்

இன்னொரு பக்கத்தில் மிகப்பெரிய ஹால் ஒன்று உள்ளது. இந்துக்கள் திருமணம் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு இங்கே சென்று வழிபாடு செய்ய முடியும். Regal Group உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சேர்ந்து இந்த கோவிலை கட்டி உள்ளனர். இங்கே 16 சாமி சிலைகள் வைக்கப்பட பல்வேறு காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்துக்கள் வெவ்வேறு இடங்களில் கோவிலை தேடி செல்லலாம், இங்கு ஒரே கோவிலில் அனைத்து கடவுள்களையும் வழிபட முடியும் என்று இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்து கோவில்

இந்து கோவில்

தென்னிந்தியாவில் அதிகம் வழங்கப்படும் பெருமாள், முருகன் சிலைகளும் இங்கே உள்ளன. ஆன்லைன் மூலமும், க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும் இங்கே புக்கிங் செய்ய முடியும். துபாயில் இரண்டு இந்து கோவில்கள் மட்டுமே தற்போது உள்ளன. இதற்கு முன் 1958ல் கட்டப்பட்ட ஒரே கோவில் மட்டுமே அங்கு இருந்தது. தற்போது இத்தனை வருடங்கள் கழித்து அங்கு பிரம்மாண்ட இந்து கோவில் கட்டப்பட்டு உள்ளது. உலகம் முழுக்க பல நாடுகளில் சகிப்புத்தன்மை குறைத்து மத ரீதியான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், துபாயில் இந்து கோவில் திறக்கப்பட்ட சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.

English summary
Lotus, 16 Deities and Massive structure: A new Hindu temple opened in Dubai today for people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X