துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடிதூள்.. துபாயில் உள்ள ஷேக் முகமது பின் ரஷீது நூலகத்திற்கு.. 1000 புத்தகங்கள் வழங்கிய தமிழக அரசு

Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் உள்ள பிரம்மாண்டமான ஃஷேக் முகமது பின் ரஷீது நூலகத்திற்குத் தமிழக அரசு சார்பில் 1000 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது.

அமீரக அரசு கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு மிகப் பெரிய முதலீடுகளைச் செய்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பிரம்மாண்டமான கட்டுமானங்கள் கட்டப்பட்டு வருகிறது.

உள்ளூர் மக்களுக்கும் பயன் தரும் வகையிலான பல முக்கிய கட்டுமானங்களை அந்நாட்டு அரசு செய்து வருகிறது. அப்படித்தான் பிரான்ஸுடன் இணைந்து லூவர் மியூசியத்தை கட்டியது.

புது மாப்பிள்ளை.. டெல்லி வேலை.. குறுக்கே வந்த 'கஸ்டமருக்கு' கை மாறிய மனைவி! கொடூர கிரைம்! புது மாப்பிள்ளை.. டெல்லி வேலை.. குறுக்கே வந்த 'கஸ்டமருக்கு' கை மாறிய மனைவி! கொடூர கிரைம்!

நூலகம்

நூலகம்

அதேபோல துபாயில் உள்ள மிக முக்கிய நூலகங்களில் ஒன்று முகமது பின் ரஷித் நூலகம். துபாயில் உள்ள அல் ஜடாப் பகுதியில் அமைந்துள்ள இந்த நூலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது. ஒரே நேரத்தில் சுமார் ஆயிரம் கார்கள் நிறுத்தும் பார்கிங் வசதியும் உள்ளது. அதாவது ஒரே நேரத்தில் ஆயிரக் கணக்காணோர் வந்தாலும் கூட நூலகத்தில் படிக்க முடியும்.

அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

இதற்கிடையே துபாயில் உள்ள இந்த ஃஷேக் முகமது பின் ரஷீது நூலகத்திற்குத் தமிழக அரசு சார்பில் 1000 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் சுற்றுலாவுக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் அமீரகம் சென்றுள்ள நிலையில், அவர் இந்த நூலகத்தின் பொறுப்பாளர் முகமது அல் மஸ்ரூஹியை நேரில் சந்தித்து இந்த புத்தகங்களை வழங்கினார்.

நன்கொடை

நன்கொடை

பழந்தமிழ் இலக்கியங்கள், வரலாற்றுப் புத்தகங்கள், சிறுகதைகள், பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகள் என மொத்தம் ஆயிரம் புத்தகங்கள் ஃஷேக் முகமது பின் ரஷீது நூலகத்திற்கு தமிழக அரசு இப்போது நன்கொடையாக வழங்கி உள்ளது. அமீரகத்தில் கணிசமான அளவுக்குத் தமிழர்கள் வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு இப்போது இந்த தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்கும் வாய்ப்பு உண்டாகி உள்ளது.

புத்தக வடிவில்

புத்தக வடிவில்

துபாயில் உள்ள இந்த பிரம்மாண்ட நூலகம் அப்படியே புத்தகத்தின் வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. காண்போரைக் கவரச் செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த நூலகத்தில் கூட்டங்கள் நடத்தத் தனி அறை, கண்காட்சி இடங்கள், குழந்தைகள் நூலகம், தரை தளத்தில் புத்தகக் கடை, வணிக நூலகம், பயிற்சிக் கூடங்கள் என்று பிரம்மாண்டமான முறையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது.

பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

இந்த நூலகம் மிகச் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக ஆறு ஆண்டுகளாக 1 பில்லியன் தினார் (இந்திய மதிப்பில் 26 ஆயிரம் கோடி) செலவில் பார்த்துப் பார்த்து இந்த நூலகத்தை அமீரக அரசு கட்டியுள்ளது. இதில் பல்வேறு துறைகளில் இருந்து பல நூறு புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இப்போது இந்த பட்டியலில் தமிழக அரசு வழங்கிய தமிழ்ப் புத்தகங்களும் இணைந்துள்ளன. இந்த நூலகத்தை கல்வி சுற்றுலா சென்ற அரசு பள்ளி மாணவர்களும் சுற்றி பார்த்தனர்.

English summary
Dubai Mohammed Bin Rashid Library book donation by tamilnadu govt: Tamilnadu govt donates books for Dubai Library.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X