காலில் விழுந்த இளைஞரை தூக்கி விட்டு அவரது காலை தொட்டு வணங்கிய அண்ணாமலை.. “கண்டிப்பா செய்றேன்” உறுதி!
ஈரோடு : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மலைவாழ் சமூக இளைஞரின் காலை தொட்டு வணங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜக தலைவர் அண்ணாமலை, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சோளகர் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டார்.
அப்போது, அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்த அந்த மலைவாழ் இளைஞர் ஒருவர் திடீரென்று அண்ணாமலையின் காலில் விழுந்து வணங்கினார்.
இதனால் பதறிப்போன அண்ணாமலை, பதிலுக்கு அவரின் காலை தொட்டு வணங்கியதோடு, அந்த இளைஞரிடம் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

மலைவாழ் பகுதிகளுக்குச் சென்ற அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு, மலைவாழ் மக்கள் வசிக்கும் தாமரைக்கரை பகுதிக்குச் சென்றார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் அண்ணாமலையிடம் கோரிக்கை வைத்தார். இங்குள்ள மக்களில் சோளகர், லிங்காயத்து, இந்து மலையாளி ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.

அண்ணாமலையிடம் கண்ணீர் விட்ட இளைஞர்
இந்து மலையாளி சமூகத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு மற்ற மாவட்டங்களில் வழங்கப்படுவது போல் சாதி சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இதனால் கல்வி, வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது என்று கண்ணீருடன் அண்ணாமலையிடம் கோரிக்கை மனு அளித்தார் அந்த இளைஞர். அண்ணாமலை அவரது கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு, அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறியபடியே, அந்த கோரிக்கை மனுவை பிரித்து படித்தார்.

திடீரென காலில் விழுந்து
பின்னர், உங்கள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என்று அண்ணாமலை சொன்னதும், அவரது காலில் விழுந்தார் அந்த இளைஞர். உடனே பதறிப்போய் அவரை தூக்கி விட்ட அண்ணாமலை, அவரது காலை தொட்டு கும்பிட்டார். கண்ணீருடன் நின்ற அந்த இளைஞருக்கு ஆறுதல் கூறி, நிச்சயமாக தேவையான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார் அண்ணாமலை.

களி சாப்பிட்ட அண்ணாமலை
பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த சோளகர் சமூகத்தைச் சேர்ந்த பூமிகா வெள்ளையன் வீட்டிற்குச் சென்று, அந்த மலைவாழ் குடும்பத்தினரிடம், அவர்களின் அன்றாட உணவான களியை கேட்டு வாங்கி சாப்பிட்டார் அண்ணாமலை. தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications