"ஹீலியம் வாயு, பாலித்தீன்".. தாலி கட்டுன ஈரம் கூட காயலையே! பெண் ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்!
ஈரோடு: ஈரோட்டில் திருமணமாகி நான்கே மாதங்களில் பெண் ஐ.டி. ஊழியர் நூதனமான முறையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
எந்த சந்தர்ப்பத்திலும் தான் உயிர் பிழைத்துவிட கூடாது என்பதற்காக அவர் சில கொடூரமான முறையை பின்பற்றி தற்கொலை செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்த தற்கொலை சம்பவம் ஈரோடு மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருணமாகி நான்கே மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐடி ஊழியர்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பொலவக்காளி பாளையத்தை சேர்ந்தவர் திருவேங்கடசாமி. இவரது மகள் இந்துமதி (25). கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துள்ள இவர், கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் இந்துமதிக்கும், நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த விஷ்ணு சாரதி (24) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் கணவன், மனைவி இருவரும் சென்னையில் தங்கி வெவ்வேறு ஐடி நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர்.

வீட்டுக்கு வந்த இந்துமதி
இதனிடையே, கடந்த சில நாட்களாக இந்துமதியின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, தனது பாட்டியை பார்ப்பதற்காக இந்துமதி இரு தினங்களுக்கு முன்பு பொலவக்காளி பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அனைவரிடமும் வழக்கம் போல இந்துமதி பேசியுள்ளார்.
இந்நிலையில், நேற்று மதிய சாப்பாட்டுக்கு பிறகு, தூங்கப் போகிறேன் எனக் கூறிவிட்டு இந்துமதி தனது அறைக்கு சென்றுவிட்டார். ஆனால் இரவாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. கதவை தட்டி பார்த்தும் திறக்கவில்லை.

நூதன முறையில் தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது இந்துமதி, தனது முகத்தில் பாலித்தீன் கவரை கட்டிக்கொண்டும், வாயில் ஹீலியம் வாயு குழாயை சொருகிக் கொண்டும் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு வந்து இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரதேப் பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆர்டிஓ விசாரணை
போலீஸ் விசாரணையில், பாலித்தீன் கவர், ஹீலியம் வாயு குழாய் ஆகியவற்றை ஆன்லைனில் இந்துமதி ஆர்டர் செய்து வாங்கியிருப்பது தெரியவந்தது.
திருமணமாகி நான்கே மாதங்களில் இந்துமதி தற்கொலை செய்து கொண்டதால், இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கோபி போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications