ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாவம்.. அவங்ளே குழம்பிட்டாங்க.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி தெரியாமல் விழித்த 2 அமைச்சர்கள்!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி பிரசாரத்தில் ஈடுபட்ட திமுகவின் 2 அமைச்சர்கள் தேர்தல் தேதி தெரியாமல் விழித்தனர்.

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் தேதி தெரியாமல் திமுகவின் அமைச்சர்கள் எவ வேலு, முத்துசாமி ஆகியோர் குழம்பி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா சமீபத்தில் காலமானார். இவர் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராககாங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், மாஜி தமிழக காங்கிரஸ் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.

இந்நிலையில் தான் பிப்ரவரி 27 ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் ஓ பன்னீர் செல்வம் அணி தனித்து போட்டியிட உள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெள்ளாளர் முன்னேற்ற கழகம் அதிரடி! வேட்பாளர் அறிவிப்பு.. யாரு பாருங்க! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெள்ளாளர் முன்னேற்ற கழகம் அதிரடி! வேட்பாளர் அறிவிப்பு.. யாரு பாருங்க!

திமுக ஆட்சிக்கான மதிப்பெண்

திமுக ஆட்சிக்கான மதிப்பெண்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 ஆண்டுகள் கழித்து நடக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். இதனால் இந்த தேர்தல் என்பது கடந்த 2 ஆண்டு ஆட்சிக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண்ணாக கருதப்படும். இதனால் இதில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் திமுக உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற கட்டாயம் திமுகவுக்கு உள்ளது. இதனை திமுகவும் நன்கு உணர்ந்துள்ளது.

திமுகவில் 11 அமைச்சர்கள் களப்பணி

திமுகவில் 11 அமைச்சர்கள் களப்பணி

இதனால் தான் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே திமுகவினர் அங்கு பிரசாரத்தை தொடங்கினர். மேலும் திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் கேஎன் நேரு, எஸ் முத்துசாமி, எவ வேலு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தாமோ அன்பரசன், சக்கரபாணி, முபெ சாமிநாதன், வி செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கயல்விழி செல்வராஜ் என மொத்தம் 11 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர எம்எல்ஏக்கள் ஏராளாமானவர்களும் தேர்தல் பணிக்குழுவில் உள்ளனர். மேலும் தேர்தல் பணிமனை திறக்கப்பட்ட பணிகள் துவங்கி உள்ளன.

அமைச்சர் எவ வேலுவுக்கு வந்த சந்தேகம்

அமைச்சர் எவ வேலுவுக்கு வந்த சந்தேகம்

இந்நிலையில் தான் நேற்று ஈரோட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு பத்திரிகையாளர்களை சந்திக்க தயாரானார். அவர் அருகே தொகுதி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒருபுறமும், அமைச்சர் முத்துசாமி மற்றொரு புறமும் இருந்தனர். இந்த வேளையில் அமைச்சர் எவ வேலு தேர்தல் தேதி பற்றிய குழப்பம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் திடீரென்று அவர் அருகே இருந்த அமைச்சர் முத்துசாமியிடம், ‛‛27 ல் தானே போலிங்'' என கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் முத்துசாமியும் குழப்பம்

அமைச்சர் முத்துசாமியும் குழப்பம்

இதைக்கேட்ட அமைச்சர் முத்துசாமியும் குழம்பிபோனார். தனது பின்னால் நின்றவரிடம் ‛‛பிப்ரவரி 27 ல் தானே போலிங்'' என கேட்டார். அந்த நபர் உறுதி செய்ததை தொடர்ந்து அமைச்சர்கள் இருவரும் தெளிவடைந்தனர். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தேர்தல் தேதியில் அமைச்சர்கள் குழப்பம் அடைந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

English summary
By-election to Erode East Assembly Constituency will be held on February 27. It was in this context that DMK ministers Eva Velu and Muthusamy stood in confusion at the press conference without knowing the date of the election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X