சத்தியமங்கலம் அருகே கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் சரமாரி தாக்குதல்!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கல்லூரி மாணவர்கள் இருதரப்பினராக பிரிந்து கொடூரமாகத் தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..
Recommended Video
சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக அக்கல்லூரியில் படிக்கும் இரு துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கல்லூரிக்கு வெளியேயும் சில அடிதடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கல்லூரி குறிப்பிட்ட ஒரு துறையில் படிக்கும் சில மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் இருந்தபோது, அங்கு வந்த மற்றொரு துறையைச் சேர்ந்த மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து கல்லூரியில் இருந்த மாணவர்கள் அங்கு குழுவாகக் கூடி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்ட அக்கல்லூரி பேராசிரியர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். பேச்சுவார்த்தையின் போதே மீண்டும் தகராறு முற்றி இரு தரப்பினரும் மீண்டும் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்திலேயே கைகலப்பு மிகப் பெரும் கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் கல்லூரி வளாகத்திலேயே மூர்க்கமாக தாக்கிக் கொண்டதால் அந்த வளாகமே போர்க்களம் போல காட்சியளித்தது. இதைக் கண்டு சில மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கல்லூரி பேராசிரியை ஒருவர் அந்த கூட்டத்தில் இருந்த மாணவர்களை சமாதானப்படுத்த முயன்று லேசான காயம் அடைந்ததாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் இந்த வீடியோவை அக்கல்லூரி மாணவர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

மாணவர்கள் கூட்டமாகக் கூடி மோதி சண்டையிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது சத்தியமங்கலம் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் நடத்தி வருகின்றனர்..
வீடியோவை வைத்து மோதலில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அடையாளம் காணும் பணியை தொடங்கியுள்ள போலீசார், அவர்களைப் பிடித்து விசாரித்தால் மட்டுமே, மாணவர்களின் மோதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்றும், அதற்கு பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனக் கூறியுள்ளனர்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications