ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

20+17+6.. திமுக போட்ட அதிரி புதிரி கணக்கு.. எனக்கு பின்னால் ஆள் இருக்கிறார்கள்.. எடப்பாடி "அஸ்திரம்"

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த தொகுதியின் வாக்கு வாங்கி தொடர்பாகவும் அவர் முக்கியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கே அதிமுக கூட்டணி சார்பாக தமிழ் மாநில காங்கிரஸின் யுவராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கே தமிழ் மாநில காங்கிரசுக்கு பதிலாக அதிமுகவே போட்டியிடும் என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.

திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே அங்கு போட்டியிட உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் விருப்ப மனு அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட சஞ்சய் சம்பத் விருப்ப மனு கொடுத்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தார் சஞ்சய் சம்பத். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

போகியில் பிறந்த ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம்! டீ கடை டூ முதல்வர்! அரசியலில் சாதித்தது, சறுக்கியது! போகியில் பிறந்த ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம்! டீ கடை டூ முதல்வர்! அரசியலில் சாதித்தது, சறுக்கியது!

பேட்டி

பேட்டி

அவர் அளித்த பேட்டியில், செந்தில் பாலாஜி கோவையில் போகஸ் செய்து பணியாற்றி வருகிறார். மாநகராட்சி தேர்தலில் பாஜக, அதிமுகவை க்ளீன் சுவீப் செய்தார். கோவை பொதுவாக அதிமுக, பாஜக தொகுதியாக இருந்தது. அதை செந்தில் பாலாஜி மாற்றிக்காட்டினார். ஆனால் ஈரோடு அதிமுக, பாஜக தொகுதி கிடையாது. ஈரோட்டில் கவுண்டர்கள் அதிகம் கிடையாது. 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு சட்டசபை

ஈரோடு கிழக்கு சட்டசபை

இதில் மைனாரிட்டிகள் திமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள். அருந்ததியர்கள் கவுண்டர்களுக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். அதனால் அவர்கள் வாக்கும் திமுகவிற்குத்தான் செல்லும். முதலியார்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் இல்லை. முதலியார்கள் 36 சதவிகிதத்தில் 20 சதவிகிதம் பேர் திமுக கூட்டணி வாக்களித்தால் கூட 20+ 17 + 6 என்று 43 சதவிகிதம் எளிதாக வந்துவிடும். மற்றபடி தேர்தல் நேரத்தில் செய்யும் பணிகள், ஆளும் கட்சி இறக்கும் பவர், செந்தில் பாலாஜி, முத்துச்சாமி போன்றவர்கள் இறங்கி வேலை செய்யும் போது 60 சதவிகிதம் வரை எடுக்க வாய்ப்பு உள்ளது. இதனால் திமுகவிற்கு வெற்றி எளிது.

20 17 6

20 17 6

இன்னொரு பக்கம் எடப்பாடி, நாம் போய் நிற்போம். தொண்டர்கள் நம் பக்கம் இருப்பார்கள். நாம் களத்தில் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள நினைக்கிறார். எடப்பாடி கிட்டத்தட்ட இதில் ரிஸ்க்தான் எடுக்கிறார். தோற்றாலும் பரவாயில்லை. நான் களத்தில் இருப்பேன். நான் ஒரு லீடர். எனக்கு பின்னால் ஆள் இருக்கிறார்கள் என்று தொண்டர்களிடம் காட்ட எடப்பாடி நினைக்கிறார். அது எவ்வளவு கை கொடுக்கும் என்று தெரியவில்லை. எல்லோரும் ஒன்று பட்டு இருக்க வேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா எல்லாம் ஒன்று சேர வேண்டும் என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள். இவர்கள் இப்படி அடித்துக்கொள்வதை தொண்டர்கள் விரும்பவில்லை.

எடப்பாடி

எடப்பாடி

கொங்கில் மட்டும்தான் எடப்பாடிக்கு ஆதரவு உள்ளது. அது அவருக்கு புரியவில்லை. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி அறிவிக்காமல் இருந்திருந்தால் இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் தனது ஆளை களமிறக்குவேன் என்று அறிவித்து இருக்க மாட்டார். இந்த தேர்தலை புறக்கணிக்க கூடாது என்பதால் எடப்பாடி ரிஸ்க் எடுக்கிறார். தேர்தல் மூலம் தனது ஆளுமையை அதிகரிக்க வேண்டும் என்று எடப்பாடி இப்படி செய்கிறார். இது ஆபத்தான விளையாட்டு. அவர் சேபாக தரையிறங்குவாரா அல்லது சிக்கலாகுமா என்று 2-3 நாட்களில் தெரிந்துவிடும். ஓபிஎஸ் - எடப்பாடி - பாஜக என்று முக்கோண மோதல் உள்ளது.

ஓ பன்னீர்செல்வம்

ஓ பன்னீர்செல்வம்

இந்த முக்கோண மோதலில் பாஜக என்ன முடிவு எடுக்கும், பாஜக எடுக்கும் முடிவுதான் பல விஷயங்களை மாற்றும். பாஜக தானே நிற்க வேண்டும் என்று நினைக்கிறது. திமுகவிற்கு நாங்கள்தான் எதிரி என்று காட்ட பாஜக நினைக்கிறது. இதனால் இந்த விஷயங்களை பாஜக தீவிரமாக கவனித்து வருகிறது. கட்சி வளர்க்கலாம், திமுகவை எதிர்க்கலாம் என்று பாஜக நினைக்கிறது. அண்ணாமலை இங்கே நிற்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். ஆனால் ஏற்கனவே தோற்றுவிட்டோம் என்பதால் அவர் கொஞ்சம் யோசனையில் இருக்கிறார்.

முக்கோண மோதல்

முக்கோண மோதல்

இந்த தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் தோற்றால் கூட பாஜக களத்தில் நிற்கிறது என்ற பெயர் இருக்கும். ஓபிஎஸ் தோற்றால் பெரிய பிரச்சனை இருக்காது. ஆனால் எடப்பாடி தோற்றால் அவர் தோற்றுகொண்டே இருக்கிறார் என்ற பெயர் வந்துவிடும். இது முக்கோண அரசியல் சதுரங்கமாக இருக்கிறது. இதற்கு பாஜகதான் தீர்வு வழங்க வேண்டும். ஓ பன்னீர்செல்வதுடன் சமாதானம் செய்யும் நோக்கத்தில் எடப்பாடி இல்லை. எடப்பாடியை வழிக்கு கொண்டு வரும் சக்தி பாஜகவிற்கு மட்டுமே உள்ளது. பாஜகவை எதிர்க்கும் சக்தி எடப்பாடிக்கு வந்துவிட்டதாக நான் இன்னும் கருதவில்லை, என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

English summary
Why is O Panneerselvam and Edappadi Palanisamy fighting over the Erode East By-Election?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X