'சந்திரசேகர ராவ் அரசாங்கம் வெண்டிலேட்டரில் உள்ளது'.. 'விரைவில் கவிழ்ந்துவிடும்'.. பாஜக மாநில தலைவர்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி வெண்டிலேட்டரில் இருக்கிறது என்றும் இதனால் தெலுங்கானா அரசு விரைவில் கவிழும் என்றும் அம்மாநில பாஜக தலைவரும் பண்டி சஞ்செய் குமார் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ்.
தேசிய அளவில் இதற்கான முயற்சியில் இறங்கியிருக்கும் சந்திரசேகர் ராவ், விரைவில் தேசியக் கட்சியையும் தொடங்குவதாக அறிவித்து இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க பாஜக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கையும் அவர் கையாண்டு வருகிறார்.

கடுமையான விமர்சனங்கள்
அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி தெலுங்கானாவிற்கு வந்த போது அவரை வரவேற்காமல் புறக்கணித்தது முதல், கேஸ் சிலிண்டரில் பிரதமர் மோடி புகைப்படத்தை ஒட்டியது வரை பாஜகவுக்கு எதிராக தனது கடுமையான நிலைப்பாட்டை நேரம் கிடைக்கும் போதெல்லாம் காட்டி வருகிறார். இதனால், தெலுங்கானாவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியும் பாஜகவும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

அரசாங்கம் வெண்டிலேட்டரில் உள்ளது
இப்படி தெலுங்கானா அரசியல் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் சந்திரசேகர் ராவ் ஆட்சி கவிழ்ந்து விடும் என்று தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பண்டி சஞ்செய் குமார் கூறியதாவது:- ''சந்திரசேகர ராவ் அரசாங்கம் வெண்டிலேட்டரில் உள்ளது. விரைவில் கவிழ்ந்துவிடும். சில கலெக்டர்களும் போலீஸ் அதிகாரிகளும் சந்திர சேகர் ராவை அம்பேத்கராக புகழ்வது வெட்கக்கேடானது.

மாஃபியாக்களின் மையப்புள்ளியாக
அம்பேத்கரால் எழுதப்பட்ட அரசியல் அமைப்பை இழிவுபடுத்தியவர் சந்திரசேகர ராவ். அனைத்து மாஃபியாக்களின் மையப்புள்ளியாக சந்திரசேகர ராவ் இருக்கிறார். சந்திரசேகர் ராவ் ஊழலில் திளைக்கிறார். அவரது குடும்பத்தினர் அமலாக்கத்துறை, சிபிஐயை கண்டு பயப்படுகின்றனர்'' என்றார். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பாஜக கவிழ்ப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தெலுங்கானா அரசு விரைவில் கவிழ்ந்துவிடும் என்று அம்மாநில பாஜக தலைவரும் எம்.பியுமான பண்டி சஞ்செய் குமார், ஆருடம் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

தனிப்பெரும்பான்மையுடன்
அதேவேளையில், 119 இடங்களை கொண்ட தெலுங்கானாவில் 88 தொகுதிகளில் வெற்றி பெற்று சந்திரசேகர் ராவ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறார். பாஜகவுக்கு அங்கு 1 எம்.எல்.ஏ மட்டுமே உள்ள நிலையில், அம்மாநில பாஜக தலைவரின் பேச்சு பெரிய அளவில் எந்த சலசலப்பையும் அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தவில்லை. ஏனெனில் அங்கு பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் வென்றுள்ளது. அடுத்த ஆண்டு (2023) தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
கள்ளக்காதல் + 2 கோடி காப்பீடு.. கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா.. மனைவியின் மாஸ்டர் பிளான் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications