நான் அப்படி சொல்லல! பாண்டவர்கள், கவுரவர்கள் யார்? திரெளபதி சர்ச்சைக்கு ராம் கோபால் வர்மா விளக்கம்
ஐதராபாத்: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது பதிவுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்தமாதம் நிறைவு பெறுகிறது. புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் ஜூலை 18 ல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் ஜூலை 21ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திரெளபதி முர்மு
பாஜகவின் தேசிய ஜனாநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக திரெளபதி முர்மு களம் இறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக போட்டியிட உள்ளார். இதில் திரெளபதி முர்மு வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில் யஷ்வந்த் சின்ஹா நாளை வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவ்லகள் வெளியாகி உள்ளன.

சர்ச்சை பதிவு
இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் பெற்ற திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் கடந்த 22ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ ஒருவேளை திரெளபதி ஜனாதிபதியானால் பாண்டவர்கள் யார்?, அதோடு மிகவும் முக்கியமாக கவுரவர்கள் யார்?'' என குறிப்பிட்டு இருந்தார்.

போலீசில் புகார்
ராம் கோபால் வர்மாவின் இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும் ஐதராபாத் அருகே அபிட்ஸ் போலீஸ் நிலையத்தில் பாஜக தலைவர் குதூர் நாராயண ரெட்டி மற்றுமு் நாண்டேஸ்வர் கவுட் ஆகியோர் புகார் செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் மனதையும் புண்படுத்தவில்லை
இந்நிலையில் தனது டுவிட்டர் பதிவு குறித்து ராம்கோபால் வர்மா மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛மகபாரதத்தில் திரெளபதி எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம். இந்த பெயர் மிகவும் அரிதானது என்பதால் அதனுடன் தொடர்புடைய கதாபாத்திரங்களை நான் நினைவுப்படுத்தி கூறினேன். இத்தகைய பதிவை யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் நான் கூறவி்லை'' என்றார்.
-
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications