ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டீல் முடிஞ்சது.. ரூ.4.50 லட்சமாம்.. வெட்டவெளிச்சமான தில்லாலங்கடி மேட்டர்.. 5 பேரையுமே தூக்கிய போலீஸ்

8 வயது சிறுவனை கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை ஆந்திர போலீஸ் கைது செய்தனர்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: 3ம் வகுப்பு மாணவனை கடத்தி ராஜமுந்திரியில் ஒரு குடும்பத்திற்கு விற்கப்பட்ட நிலையில், போலீசார் அச்சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர்.. அத்துடன், கடத்தலில் சம்பந்தப்பட்ட 5 பேரையும் தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரம், பத்ராசலம் பகுதியை சேர்ந்தவர் அந்த 8 வயது சிறுவன். அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 6-ந் தேதி ஸ்கூலுக்கு சென்ற சிறுவன், மறுபடியும் வீட்டுக்கு வரவேயில்லை.. இதனால், பெற்றோர் தங்கள் மகனை எங்கெங்கோ தேடினார்கள்.. எங்குமே சிறுவன் கிடைக்கவில்லை.

 ஆண்களே கவனம்! இந்த டைப் கார் ஓட்டுனா.. அந்த உறுப்பு சின்னதா இருக்க வாய்ப்பு அதிகம்.. பகீர் ஆய்வு ஆண்களே கவனம்! இந்த டைப் கார் ஓட்டுனா.. அந்த உறுப்பு சின்னதா இருக்க வாய்ப்பு அதிகம்.. பகீர் ஆய்வு

8வயது மகன்

8வயது மகன்

இதனால், போலீசில் மகனை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தனர்.. போலீசாரும் அதன்பேரில் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேட ஆரம்பித்தனர்.. அப்போது, சிறுவன் பள்ளிக்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண் ஒருவர், சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது... இதையடுத்து அந்த பெண் யார் என்ற அடுத்த விசாரணையை போலீசார் மேற்கொண்டபோதுதான், அது அன்னப்பூர்ணா என்பவரது மகள் அனுஷா என்பது தெரியவந்தது.

ஸ்நாக்ஸ்

ஸ்நாக்ஸ்

இதையடுத்து, தடகுடி சென்டர் பகுதியை சேர்ந்த அன்னபூர்ணா, அவரது மகன் சாய்ராம், மகள் அனுஷா ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில்தான் மொத்த உண்மையும் தெரியவந்தது.. ராஜ மகேந்திரவரதத்தை சேர்ந்த சினேகலதா-ஐசக் குன்னம் தம்பதியிருக்கு குழந்தை இல்லையாம். அதனால், புரோக்கர் துளசி என்பவரை அணுகி, குழந்தையை கடத்தி வந்து கொடுத்தால், அதற்கு பணம் தருவதாக சொல்லி உள்ளனர்.. இந்த விஷயத்தை புரோக்கர் துளசி, அன்னபூர்ணாவிடம் சொல்லி உள்ளார்.

ராஜமுந்திரி

ராஜமுந்திரி

அன்னபூர்ணாவின் வீட்டின் வழியாகத்தான் சிறுவன் தினமும் ஸ்கூலுக்கு செல்வானாம்.. எனவே, எளிதாக சிறுவனை கடத்தி விற்க அனைவருமே சேர்ந்து திட்டம் தீட்டினார்கள்.. சம்பவத்தன்று சிறுவன் ஸ்கூலுக்கு போகும்போது, மகள் அனுஷாவை அனுப்பி சிறுவனுக்கு அங்குள்ள கடையில், இனிப்பு மற்றும் ஸ்நாக்ஸ்களை வாங்கி கொடுக்க சொன்னாராம் அன்னபூர்ணா.. பின்னர், சிறுவனை ராஜ மகேந்திரபவரம் அழைத்துச் சென்று சினேகா லதாவிடம், "இவன்தான் என்னுடைய மகன்" என்று அறிமுகம் செய்துள்ளார் அன்னபூர்ணா. ரூ.4.50 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக அன்னப்பூர்ணா சினேகலதாவிடம் தெரிவிக்க, அதற்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்..

டீல் முடிந்தது

டீல் முடிந்தது

இறுதியில் 4.50 லட்சத்திற்கு சிறுவன் விலைபேசப்பட்டுவிட்டான்.. டீல் முடிந்ததையடுத்து, இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுவனை அன்னப்பூரணி எச்சரித்துள்ளனர்.. இந்தசூழலில்தான், கடந்த 6-ந் தேதி சிறுவனை கடத்திச் சென்று ரூ 4.50 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளனர்.. விசாரணை முடிவில், விரைந்து சென்ற போலீசார் மகேந்திரவரம் சென்று சிறுவனை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், சிறுவனை விலைக்குவாங்கிய சினேகலதா, ஐசக் குன்னம் மற்றும் புரோக்கர் துளசி, சிறுவனை கடத்திய அன்னபூர்ணா அவரது மகள் அனுஷா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெட்டவெளிச்சம்

வெட்டவெளிச்சம்

இந்த சம்பவம் குறித்து, பத்ராசலம் ஏஎஸ்பி ரோஹித் ராஜ் சொல்லும்போது, முதலில் சந்தேகத்திற்குரிய நபர்களான அன்னபூர்ணா, அனுஷ்கா மற்றும் சாய்ராம் ஆகியோரை போலீசில் எடுத்து விசாரிக்கப்பட்டனர்.. 3 பேருமே குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, சிறுவனை விலைக்கு வாங்கிய தம்பதியையும், புரோக்கரையும் கைது செய்யப்பட்டுள்ளார்.. அன்னபூர்ணா, அனுஷ்கா, சாய்ராம் ஆகியோர் இந்த கடத்தலுக்கு பிளான் செய்துள்ளனர்.. பள்ளிக்கு சென்று வீடு திரும்பும்போது சிறுவனுடன் நட்பாக பேசி, கடைசியில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் சிறுவனைக் கடத்தி சென்றுள்ளனர்.. அன்னபூரணியிடம் இருந்து ரூ.3.10 லட்சம் ரொக்கம் மற்றும் 3 செல்போன்களும் மீட்கப்பட்டுள்ளன.. சிறுவனும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்" என்றார்.

English summary
Eight year old boy kidnapped by five and arrested near andhra pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X