ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜூனியர் என்டிஆர் ஃபர்ஸ்ட்டு.. மிதாலி ராஜ் நெக்ஸ்டு.. வேற லெவலில் கணக்கு போடும் பாஜக! அதிரும் அரசியல்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் சந்தித்துள்ளது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Former Indian Cricketer Mithali Raj meets BJP national president JP Nadda in Hyderabad

அண்மையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆபரேசன் தென் இந்தியா என்ற புதிய திட்டத்தை பாஜகவினர் மத்தியில் மத்திய அமைச்சர் அமித் ஷா முன்வைத்தார். இந்த திட்டத்தின்படி, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியமைக்க கட்சியினர் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை நியமன எம்பி-க்கள் பதவிகளில் இந்த 4 மாநிலங்களைச் சேர்ந்த திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் தெலங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு பாஜகவின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் பணியாற்ற தனித்தனிக் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக பாஜக செயலாற்றி வருகிறது.

'உளவுத்துறை போலீஸ் பேசுறேன்.. புகார் வருது.. ஜப்தி பண்ணிருவோம்’- 7 லட்சத்தை அபேஸ் செய்த இளைஞர் கைது! 'உளவுத்துறை போலீஸ் பேசுறேன்.. புகார் வருது.. ஜப்தி பண்ணிருவோம்’- 7 லட்சத்தை அபேஸ் செய்த இளைஞர் கைது!

இந்த நிலையில் தெலுங்கானாவில் முனுகோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பரப்புரைக்காக ஹைதராபாத் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நடிகர் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராமோஜி பிலிம் சிட்டி உரிமையாளர் ராமோஜி ராவ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதனால் நடிகர் ஜூனியர் என்டிஆர் விரைவில் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் தந்தை என்டி ராமா ராவ் முதலமைச்சராக இருந்துள்ளதால், அவரது வழியில் ஜூனியர் என்டிஆர் அரசியலில் கால் பதிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இடைத்தேர்தல் பரப்புரைக்காக ஹைதராபாத் வந்த ஜேபி நட்டா, இந்திய மகளின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜை சந்தித்து பேசியுள்ளார்.

சில நிமிடங்கள் மட்டுமே மட்டுமே இருவரும் சந்தித்ததாகவும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தெலங்கானாவைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை சாய்னே நேவால், பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் விரைவில் மிதாலி ராஜ்-ம் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக தெலங்கானா வரும் பாஜக தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு நட்சத்திரங்களை சந்திப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பாஜகவின் இந்த நடவடிக்கைள் இடைத்தேர்தலுக்கானது மட்டுமல்ல. அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கானதாகவும் பார்க்கப்படுகிறது.

English summary
( மிதாலி ராஜை சந்தித்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ) Former Indian Cricket Team captain Mithali Raj meets BJP national president JP Nadda in Hyderabad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X