மோடியை அப்படி புகழ்ந்தாரே.. இப்போ என்னாச்சு.. சந்திரசேகர ராவ் அணி திரட்டலின் அரசியல் பின்னணி!
ஐதராபாத்: தெலுங்கானா முதல்வராக இருக்கும் சந்திரசேகரராவ், தற்போது தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக அரசையும் கடும் சொற்களால் விமர்சித்து வருகிறார். நண்பர்களாக இருந்த இவர்களுக்குள் நடந்தது என்ன என்பது பற்றிய முழு தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கானா தனிமாநிலம் கோரி பல போராட்டங்களை முன்னெடுத்தவர் கே.சந்திர சேகரராவ் (கேசிஆர்). இந்த போராட்டத்துக்கு பலன் கிடைத்தது. இதையடுத்து ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து பிரிந்து 2014ல் தெலுங்கானா தனி மாநிலமாக மாற்றப்பட்டது. தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி மூலம் சந்திரசேகரராவ் முதல்வரானார்.
இதையடுத்து மத்திய அரசுடன் நெருக்கம் காட்டி வந்தார். பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து தள்ளினார். 2016 ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானாவுக்கு சந்திரசேகரராவ் அழைத்தார். அவரது தொகுதியான காஜ்வெல்லில் குழாய் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்தார். தெலுங்கான மாநிலம் உருவான பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் முதல் ‛விசிட்' இதுவாகும்.

மோடிக்கு முதல் அழைப்பு
இந்த வேளையில் சந்திர சேகரராவ் பேசும்போது, ‛‛நாட்டின் மிக பிரபலமான தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். வரலாற்றிலேயே 100 சதவீத ஊழல் இல்லாத ஆட்சியை அவர் கொடுத்து வருகிறார்'' என புகழ்ந்து பேசினார். பிரதமர் மோடி பேசும்போது, ‛‛புதிய மாநிலம் தெலுங்கானா வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது. குறிப்பாக நீர் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது'' என்றார். மேலும் இந்தியா-பிரான்ஸ் இடையேயான ரபேல் ஒப்பந்தம் குறித்து 2016 செப்டம்பரில் சந்திரசேகர ராவ் பெருமை பேசினார். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வரவேற்றவர், பல்வேறு மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்ற ராஜ்சபாவில் தனது கட்சி எம்பிக்கள் மூலம் ஆதரவு தெரிவித்து வந்தார்.

கடும் விமர்சனம்
இந்நிலையில் தான் சமீபகாலமாக சந்திர சேகரராவ் தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக பேசி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சிக்கிறார். 2024 பாராளுமன்ற தேர்தலில் 3வது அணிக்கு தலைமை தாங்கி பிரதமர் வேட்பாளராக மாற சந்திரசேகரராவ் முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

முகத்திரையை கிழிப்போம்
இதனால் தான் அவர் சமீபத்தில், ‛‛பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஊழல் அதிகரித்து ஊற்றெடுக்கிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தொழிற்சாலைகளின் வளர்ச்சி முடங்கி உள்ளது. பாஜகவின் ஊழல் பட்டியல் எங்களிடம் உள்ளது. உச்சநீதிமன்றம், மக்கள் நீதிமன்றம்(தேர்தல்) ஆகியவற்றில் பாஜகவின் முகத்திரையை கிழிப்போம். விஜய் மல்லையா, நிரவ்மோடி, மெகுல் சோக்சி உள்பட 33 கடன்கார்கள் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் குஜராத்தை சேர்ந்த மோடியின் நண்பர்கள். நரேந்திர மோடியின் மத்திய அரசை விரட்ட பாராளுமன்ற தேர்தலிலும் களம் காண்பேன். மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பது 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கூறப்பட்ட தகவல் மட்டுமே'' என விமர்சனம் செய்தார்.

பல காரணங்கள்
மத்தியில் 3வது கூட்டணி, பிரதமராக ஆசைப்படும் சந்திரசேகரராவ் என ஒருபுறம் கருத்து தெரிவிக்கப்பட்டாலும், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக அரசு மீது சந்திரசேகரராவிற்கு வெறுப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு: மத்திய அரசு சார்பில் தெலுங்கான மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரச நிதி ஒதுக்காதது, நெல் கொள்முதல் செய்யாதது ஆகியவை சந்திரசேகரராவுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியது. குஜராத்தை ஒப்பிடும்போது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையாக தெலுங்கானாவை பார்ப்பது அவருக்கு பாஜக மீது வெறுப்பை ஏற்படுத்தியது.
இதுபோன்ற காரணத்தினால் தான் சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் சமத்துவத்தின் அடையாளமாக ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தபோது டுவிட்டரில் Equality for telangana எனும் ஹேஸ்டேக்கை அக்கட்சியினர் டிரெண்ட் செய்தனர்.

ஊழல் குற்றச்சாட்டு
மேலும் மாநிலத்தில் உள்ள காலீஸ்வரம் திட்டம், கோதாவரி நீர் தொடர்பான திட்டங்களில் அவரது குடும்பத்தினர் பெரும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டுவது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் தான் 2019 பாராளுமன்ற தேர்தல் வரை பாஜகவுடன் நட்பாக இருந்தவர் அதன்பின் விலகினார். தற்போது கடும் விமர்சனம் செய்து வருகிறார். 2019ல் தெலுங்கானாவில் 4 பாராளுமன்ற தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. மாநிலத்தில் பாஜக வளர்ந்துவிடும் என்ற அச்சத்தை அவருக்கு ஏற்படுத்தியது.

சிரமத்தில் மகள், மகன்
மேலும் நிஜாமாபா பாராளுமன்றத் தொகுதியில் சந்திரசேகரராவின் மகள் கல்வகுண்ட்லா கவிதா எம்பியாக இருந்தார். 2019ல் நடந்த தேர்தலில் பாஜகவின் தர்மபுரி அரவிந்த் அவரை வீழ்த்தினார். இந்த தேர்தலில் 12 முதல் 14 இடங்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்த்த சந்திரசேகரராவுக்கு மகளின் தோல்வி உள்பட 9 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. தற்போது சந்திரசேகரராவின் மகனும் தகவல்தொழில் நுட்ப அமைச்சருமான ராமராவ், வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக பலமுறை கடிதம் எழுதியும், மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் அவர் துறை சார்ந்த திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன. மகள், மகனின் அரசியல் வாழ்வை பாதிக்கும் இத்தகைய செயல்களால் சந்திரசேகரராவ் மன உளைச்சலில் உள்ளார்.

ஆதரவாளரை பிரித்த பாஜக
அத்துடன் 2020 இடைத்தேர்தலில் துப்பகா தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது. அடுத்த மாதமே ஐதரபாத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 150 வார்டுகளில் 48 கவுன்சிலர்களை பெற்றது. மேலும் சந்திரசேகரராவின் வலதுகரமான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டிடாலா ராஜேந்தரையும் அவரிடம் இருந்து பிரித்து கடந்த நவம்பரில் தெலுங்கான ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் கோட்டையான ஹூசுராபாத் தொகுதியில் நிறுத்தி பாஜக வெற்றி பெற்றது. இது பாஜக மீதான வெறுப்பை சந்திரசேகரராவுக்கு இன்னும் அதிகப்படுத்தியது.

தடுக்க திட்டம்
மாநிலத்தில் காங்கிரஸ் எதிராக இருக்கலாம். அதேநேரத்தில் பாஜக பெரும் பலசாலியாக மாறிவிடும் என்ற அச்சம் சந்திரசேகரராவிடம் எழுந்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன்மூலம் தெலுங்கானாவில் பாஜக திடமாக கால் ஊன்றுவதை தடுக்க திட்டமிட்டு அவர் பாஜகவை விமர்சனம் செய்து பிற மாநில தலைவர்களின் ஆதரவுகளை பெற்று வருவதாகவும் ஒருசில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications