"குடும்ப அரசியல் சாபக்கேடு! அதை செய்பவர் கேசிஆர்! மூடநம்பிக்கை இல்லாத துறவி யோகி!" பிரதமர் பாராட்டு
ஹைதராபாத்: தெலங்கானாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கேசிஆர் குடும்ப அரசியல் செய்வதாக மறைமுகமாகத் தாக்கி பேசினார்.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறையின் புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் பயணமாகச் சென்னை வருகிறார். முன்னதாக அவர் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் சென்றிருந்தார்.
ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் பிஸ்னஸ் ஸ்கூல் தொடங்கி 20 வருடம் ஆனதை கொண்டாடியும் வகையில் நடக்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

பிரதமர் மோடி
இதையடுத்து பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தெலங்கானா போராட்டம் என்பது ஒரு குடும்பம் மட்டும் ஆட்சி செய்வதற்காக இல்லை. குடும்ப அரசியல் காரணமாக நாட்டின் இளைஞர்களுக்கு அரசியலில் எந்தவொரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. குடும்ப கட்சிகள் தங்கள் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றன.

குடும்ப அரசியல்
ஏழை மக்களைப் பற்றிக் கவலைப்படாத இந்த கட்சிகள், ஒரே குடும்பம் எப்படி ஆட்சியில் தொடர முடியும் என்பது குறித்தும் எவ்வளவு தூரம் கொள்ளையடிக்கலாம் என்பது குறித்தும் தான் அரசியல் செய்கின்றன. அவர்களுக்கு மக்களின் வளர்ச்சியில் எந்தவொரு ஆர்வமும் இல்லை. குடும்ப அரசியல் என்பது வெறும் அரசியல் பிரச்சனை மட்டுமல்ல. ஜனநாயகத்திற்கும் இளைஞர்களுக்கும் மிகப்பெரிய எதிரியும் கூட! ஒரு குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் எப்படி மாறுகிறது என்பதை நம் நாடு பார்த்திருக்கிறது.

குறி வைக்கப்படும் பாஜக
கேசிஆர் அரசு தொடர்ச்சியாக ஊழல் செய்து வருகிறது. தெலங்கானா மக்கள் இவர்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானாவில் உள்ள பாஜகவினர் அரசியல் ரீதியாகக் குறிவைக்கப்படுகின்றனர். இந்த குடும்ப கட்சிகள் குறிப்பிட்ட பிரிவினரைத் திருப்திப்படுத்தும் அரசியலைச் செய்து வருகிறது. அவர்கள் தங்கள் செல்வத்தை நிரப்புவதில் தான் மும்முரமாக உள்ளன. அதே நேரத்தில் பாஜக தெலங்கானாவை ஐடி ஹப்பாக மாற்ற விரும்புகிறது.

மூடநம்பிக்கை
மூடநம்பிக்கை கொண்டவர் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தால் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர்களால் உழைக்க முடியாது. எனக்கு அறிவியலில் நம்பிக்கை உள்ளது. மூடநம்பிக்கையில் நம்பிக்கை இல்லாத துறவியான யோகி ஆதித்யநாத்தையும் வாழ்த்துகிறேன். இதுபோன்ற மூடநம்பிக்கை கொண்டவர்களிடம் இருந்து தெலுங்கானாவை காப்பாற்ற வேண்டும்" என்று மிகக் கடுமையாகத் தாக்கி பேசினார்.

கேசிஆரின் குடும்பம்
தெலுங்கானா முதலமைச்சரின் மகன் கே.டி.ராமராவ் சிர்சில்லா சட்டமன்ற உறுப்பினராகவும், ஐடி அமைச்சராகவும் உள்ளார். நிஜாமாபாத்தில் இருந்து எம்.பி.யாக இருந்த கேசிஆரின் மகள் கல்வகுந்த்லா கவிதா, தற்போது நிஜாமாபாத் சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளார். கேசிஆரின் மருமகன் ஹரிஷ் ராவ், சித்திபேட்டை எம்.எல்.ஏ ஆகவும் மற்றும் தெலுங்கானாவின் நிதி அமைச்சராகவும் உள்ளார்.
Recommended Video

வரவேற்கவில்லை
ஹைதராபாத்தில் பிரதமர் மோடியை வரவேற்கத் தெலுங்கானா முதல்வர் கே சந்திர சேகர ராவ் செல்லவில்லை. கர்நாடகா சென்று, அங்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடாவை கேசிஆர் சந்திக்கிறார். இதனால் அவர் பிரதமரை வரவேற்கச் செல்லவில்லை. கடந்த 4 மாதங்களில் இரண்டாவது முறையாக தெலங்கானா முதல்வர் கேசிஆர் பிரதமர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைத் தவிர்த்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications