தெலுங்கானா காங். எம்எல்ஏக்களுக்காக ஹைதராபாத் தாஜ் கிருஷ்ணா ஹோட்டல் 60 அறைகளுடன் ரெடி- வாடகை எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்க ஹைதராபாத் தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் 60 அறைகளை புக் செய்து வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவில் 119 தொகுதிகளில் நவம்பர் 30-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் 71% வாக்குகள் பதிவாகி இருந்தன. தெலுங்கானாவில் பெரும்பான்மைக்கு தேவை 61 இடங்கள்.

Telangana: Congress Book 60 Rooms in Hyderabad Taj Krishna Hotel for New MLAs

தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே 2014, 2018 சட்டசபை தேர்தல்களில் பிஆர்எஸ் கட்சிதான் வென்றது. தெலுங்கானாவில் 2-வது முறை முதல்வராக பதவி வகித்து வருகிறார் பிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவ். தெலுங்கானா சட்டசபை தேர்தலில் இம்முறை அனல் பறந்தது.

தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானா தேர்தல் களத்தில் பாஜகவும் இருந்தாலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்கின்றன தேர்தல் கருத்து கணிப்புகள். தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைக்கும் என சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. தெலுங்கானாவில் காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும் என்கின்றன பல கருத்து கணிப்புகள்.

தெலுங்கானாவில் நேற்று முதலே குதிரை பேர அரசியல் தொடங்கிவிட்டது. தெலுங்கானாவில் வெல்லும் வாய்ப்புள்ள காங்கிரஸ் வேட்பாளர்களுடன் பிஆர்எஸ் கட்சி பேரம் பேசத் தொடங்கிவிட்டது. இதனையடுத்து தெலுங்கானா காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் பாதுகாப்பு வளையம் அமைத்தது. மேலும் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் ஹைதராபாத்தில் முகாமிட்டு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஹைதராபாத்துக்கு நேற்று இரவு வந்து சேர்ந்தார் டிகே சிவகுமார். அப்போது அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களையும் பாதுகாத்து வருகிறோம். எங்களை மீறி எந்த ஒரு வேட்பாளர் அல்லது எம்.எல்.ஏ. செல்லமாட்டார்கள் என்றார்.

இந்த நிலையில் தெலுங்கானாவில் வெற்றி சான்றிதழைப் பெறுகிற அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் நேரடியாக ஹைதராபாத் தாஜ் கிருஷ்ணா ஹோட்டலுக்கு வந்து சேர கட்டளையிடப்பட்டுள்ளது. ஹைதராபாத் தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் மொத்தம் 60 அறைகளை காங்கிரஸ் கட்சி புக் செய்து வைத்துள்ளது. தாஜ் கிருஷ்ணாவில் ஒரு அறைக்கான ஒருநாள் அறை வாடகை மட்டும் ரூ14,000 என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+