தெலுங்கானா: மாஜி 'நக்சலைட்' சீதாக்காவுக்கு பழங்குடிகள் துறை- ரேவந்த் ரெட்டி கேபினட் இலாகா அறிவிப்பு!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் அரசாங்கத்தில் முன்னாள் நக்சலைட் சீதாக்காவுக்கு பழங்குடிகள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 64 இடங்களிலும் பிஆர்எஸ் கட்சி 39 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வென்றது. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி வழக்கம் போல 7 இடங்களைக் கைப்பற்றியது.

தெலுங்கானா மாநிலம் 2014-ல் உருவானது. 2014, 2018 தெலுங்கானா தேர்தலில் பிஆர்எஸ் கட்சியே ஆட்சியை பிடித்தது. முதல்வராக 2 முறையும் சந்திரசேகர ராவ் பதவி வகித்தார். தெலுங்கானாவில் தற்போது நடைபெற்ற 3-வது தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியை அறுவடை செய்துள்ளது.
தெலுங்கானாவில் முதல் முறையாக ஆட்சியை அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, முதல்வராக ரேவந்த் ரெட்டியை அறிவித்துள்ளது. ஹைதராபாத் எல்.பி. ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்றார். தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ரேவந்த் ரெட்டிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் மொத்தம் 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
1) கொண்டா சுரேகா
2) கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி
3) ஜூபாலி கிருஷ்ணா ராவ்
4) பாட்டி விக்ரமார்கா
5) உத்தம் குமார் ரெட்டி
6) பொன்னம் பிரபாகர்
7) சீதாக்கா
8) ஸ்ரீதர் பாபு
9) தும்மல நாகேஸ்வர ராவ்
10) பொங்குலெட்டி சீனிவாச ரெட்டி
11) தாமோதர ராஜநரசிம்மா
State Congress president Revanth Reddy becomes the new Chief Minister of Telangana, Bhatti Vikramarka his Deputy. pic.twitter.com/rjnpsATY9T
— ANI (@ANI) December 7, 2023
ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் பாட்டி விக்ரமார்கா, உத்தம் குமார் ரெட்டி இருவரும் முதல்வர் பதவிக்காக முட்டி மோதியவர்கள். இவர்களில் பாட்டி விக்ரமார்கா துணை முதல்வராகி உள்ளார்.
15 ஆண்டுகள் மாவோயிஸ்டாக வாழ்ந்தவர் சீதாக்கா. 1994-ம் ஆண்டு முதல் பொது அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளார். முதலில் தெலுங்குதேசம் கட்சியில் இருந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியில் பெண்களின் முகமாக தெலுங்கானாவில் சீதாக்கா உருவெடுத்துள்ளார்.
தெலுங்கானா அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு முன்னாள் முதல்வர்கள் சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் அழைக்கப்பட்டனர். மூத்த காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் இப்பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
#WATCH | Congress leader Revanth Reddy takes oath as the Chief Minister of Telangana at Hyderabad's LB stadium; Governor Tamilisai Soundararajan administers him the oath of office. pic.twitter.com/TBtZRE0YQD
— ANI (@ANI) December 7, 2023
முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை இலாகாக்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கான ரேஸில் இருந்த உத்தம் குமார் ரெட்டிக்கு உள்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது. சீதாக்காவுக்கு பழங்குடிகள் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
-
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications