ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ. 73 லட்சம் சேவை வரி, அபராதம் கட்டாத நடிகர் மகேஷ் பாபு… வங்கி கணக்குகள் முடக்கம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்:சேவை வரி கட்டாத பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக இருந்து வருபவர் மகேஷ் பாபு. அவர் கடந்த 2007-08-ல் ஒரு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக செயல்பட்டு வந்தார். அதற்காக நடிகர் மகேஷ் பாபு, சேவை வரி ஏதும் கட்டாமல் இருந்து வந்துள்ளார்.

telugu actor mahesh babus bank accounts frozen by gst officials

சேவை வரியாக மகேஷ்பாபு ரூ. 18.5 லட்சத்தை செலுத்த வேண்டும். ஆனால் அதை அவர் கட்டாததால் வட்டி, அபராதம் என மொத்தம் ரூ. 73.5 லட்சத்தை நடிகர் மகேஷ் பாபு அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும். ஆனால், அதில் எந்த தொகையையும் அவர் செலுத்தவில்லை.

அதனை கண்டுபிடித்த வரிகளை வசூலிக்கும் ஜிஎஸ்டி துறை மகேஷ் பாபுவின் ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கணக்குகளை அதிரடியாக முடக்கம் செய்து உள்ளது.

இது குறித்து கூறிய ஜிஎஸ்டி துறை அதிகாரிகள், சேவை வரியை பெறுவதற்காக வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளோம். மகேஷ் பாபுவின் ஆக்சிஸ் வங்கி கணக்கில் இருந்து ரூ. 42 லட்சத்தை பெற்றிருக்கிறோம்.

மீதமுள்ள தொகையானது ஐசிஐசிஐ வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்படும். அதனை தராவிட்டால் அந்த வங்கிக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம். அரசுக்கு மகேஷ் பாபு செலுத்த வேண்டிய தொகையை அவர் செலுத்தாத வரை அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
Famous Telugu Actor Mahesh Babu's bank accounts frozen by GST department over tax dues. The total tax due from him was Rs 18.5 lakh and the GST department has attached his bank accounts for an amount of Rs 73.5 lakh which includes tax, interest and penalty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X