"கண்ணே கூசுதே".. ஏன் சிரிச்சி சிரிச்சி பேசுறே.. கள்ளக்காதலனுக்கு உச்சிக்கு ஏறிய கோபம்.. ஐயோ கஸ்தூரி
ஹைதராபாத்: ஆடு மேய்க்க போன கஸ்தூரி, எப்படி மாந்தோப்புக்குள் சடலமாக கிடந்தார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. இது தொடர்பாக குற்றவாளி ஒருவரையும் கைது செய்துள்ளனர். கஸ்தூரிக்கு என்ன ஆச்சு?
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்துள்ளது சேஷாபுரம் என்ற கிராமம்.. இந்த கிராமத்துக்கு பக்கத்தில் ஒரு மாந்தோப்பு இருக்கிறது.. இங்கு கடந்த 12ம்தேதி பெண் ஒருவர் சடலமாக கிடந்தார்.

இவரை யாரோ கொடூரமாக கொலை செய்து, இங்கு வீசியுள்ளது தெரியவந்தது.. இதனால், அந்த பகுதி மக்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தார்கள்.
சித்தூர் பெண்: சித்தூர் தாலுகா போலீசாரும், சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி, இது தொடர்பான வழக்கையும் பதிவு செய்து விசாரித்தனர்.. இதில் கொலையானவர் சித்தூர் மாவட்டம் துமிந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்பது தெரியவந்தது.. அவருக்கு 49 வயாகிறது.. கணவர் பெயர் சேஷய்யா என்பதும் தெரியவந்தது.
ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.. எனவே கஸ்தூரி, ஆடுகள் மேய்த்து குடும்பம் நடத்தி வந்தார். அப்போதுதான், அதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இவருக்கு 52 வயதாகிறது.. இவரும் ஆடுகளை மேய்த்து வருபவர்தான்.. திருமணமாகிவிட்டது, ஆனால் மனைவி இல்லை.. கஸ்தூரி ஆடு மேய்க்கும் பகுதியில்தான், இவரும் தன்னுடைய ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வருவாராம்..
கஸ்தூரி யார்: இதனால், கஸ்தூரியும், ஸ்ரீராமுலுவும் தினமும் ஒன்றாக ஆடு மேய்த்து வந்தபோது, அவர்களிடையே நெருக்கம் அதிகமாகி, தகாத உறவும் ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால், கஸ்தூரி அதே கிராமத்தை சேர்ந்த சில ஆண்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.. அதனால் அவர்களுடன் அடிக்கடி சிரித்து பேசுவாராம்... இது ஸ்ரீராமுலுவுக்கு பிடிக்கவில்லை.. ஏன் எல்லாரிடமும் சிரிச்சு சிரிச்சு பேசுறே என்று கஸ்தூரியை கண்டித்துள்ளார்...
ஆனாலும், கஸ்தூரி, அந்த ஆண்களுடன் பேசி பழகுவதை நிறுத்தவில்லையாம். கடந்த 11ம்தேதி இருவரும் வழக்கம்போல் காட்டுப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது மறுபடியும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீராமுலு, தான் வைத்திருந்த அரிவாளால் கஸ்தூரியை சரமாரியாக வெட்டியுள்ளார்.. கழுத்து, வயிறு என பல பகுதிகளில் வெட்டு விழுந்ததால் கஸ்தூரி அதே இடத்தில் பரிதாபமாக இறந்துவிட்டார்..
விசாரணை : இதற்கு பிறகு, சடலத்தை சேஷாபுரம் கிராமம் அருகே உள்ள மாந்தோப்பில் வீசிவிட்டு ஸ்ரீராமுலு தலைமறைவாகிவிட்டார்.. இதெல்லாம் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, தலைமறைவான ஸ்ரீராமுலுவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்... நேற்றைய தினடம், காட்டுப்பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வரவும், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.. அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில்தான் மேற்கண்ட தகவல்கள் கிடைத்தன.. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
கஸ்தூரிக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்களாம்.. இவர்களை காப்பாற்றுவதற்காகத்தான், ஆடுகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.. 2 வருடங்களுக்கு முன்பு, கூலி வேலைக்கு செல்லும்போதுதான், ஸ்ரீராமுலுவை சந்தித்துள்ளார்.. அதற்கு பிறகு அவரும் ஆடு மேய்ச்சலுக்கு வந்துள்ளார்.. 2 பேருமே ஆடுகளை காலை நேரத்தில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, மாலை நேரத்தில் வீடு திரும்பும்போது, ஒன்றாக மது அருந்துவது பழக்கமாம்.. ஆனால் சமீப காலமாகவே, சில ஆண்களுடன் கஸ்தூரியை நெருக்கத்தில் பார்த்துள்ளார் ஸ்ரீராமுலு..
தன் கண்ணெதிரே அந்த கோலத்தில் பார்த்துவிடவும்தான், சகிக்க முடியாமல், கொலை வரை சென்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.. சம்பவத்தன்று வெகுநேரமாகியும், கஸ்தூரி வீட்டிற்கு வராததால், அவரது சந்தேகமடைந்த கஸ்தூரியின் மகன், உறவினர்கள் உதவியுடன் காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.. அடர்ந்த வனப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் அம்மா சடலமாக கிடப்பதை பார்த்ததுமே கஸ்தூரியின் மகன் கதறி அழுதது, அங்கிருந்தோரை கலங்கடித்து விட்டதாம்.. "கூடா நட்பு, கேடாய்தானே முடியும்???"
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications