வீட்டு செலவுக்கு வைத்திருந்த பணத்தில் புதிய மொபைல்..மனைவி திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்த கணவர்
ஹைதராபாத்: வீட்டுச் செலவுகளுக்கு வைத்திருந்த பணத்தைக் கொண்டு புதிய மொபைல்போன் வாங்கியதற்காக மனைவி திட்டியதால், தெலங்கானாவில் பெயின்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் அட்டவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லேஷ் (35). இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பெயிண்டரான மல்லேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை, வீட்டிலிருந்த பணத்தைக் கொண்டு புதிய மொபைல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
வீட்டுச் செலவுகளுக்கு வைத்திருந்த பணத்தை எடுத்து மல்லேஷ் புதிய செல்போனை வாங்கியதால், இது தொடர்பாக அஞ்சுவுக்கும் மல்லேஷுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற, ஆத்திரமடைந்த மல்லேஷ், பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார். கிராமத்தின் வெளியே சென்ற மல்லேஷ், அங்கிருந்த குளத்தின் அருகே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டாதாகக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை தான், அந்த வழியே சென்ற உள்ளூர் மக்கள் சடலத்தை முதலில் பார்த்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications