For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமானுஜர் 1000 மாவது ஆண்டு விழா - தபால் தலை வெளியிட்டு மோடி புகழாரம்

மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபட்டவர் ராமானுஜர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ராமானுஜரின் 1000வது ஆண்டு விழாவையொட்டி ராமானுஜரின் தபால் தலை டெல்லியில் வெளியிடப்பட்டது. தபால் தலை வெளியீட்டுக்கு பின் பேசிய பிரதமர் மோடி மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபட்டவர் ராமானுஜர் என புகழாரம் சூட்டினார்.

ஸ்ரீ ராமானுஜர் கிபி 1017ஆம் ஆண்டு, அப்போது பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஸ்ரீபெரும்புதூரில் தோன்றினார். வைணவ சமயத்தை தோற்றுவித்தவரும்,சாதி,மதங்களளைக் கடந்து மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என் உயரிய கருத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்திய மகான் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர அவதார தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ராமானுஜர்

ஸ்ரீ ராமானுஜர்

ஸ்ரீ ராமானுஜர் திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணனின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன், ராமாவதாரத்தில் ராமர் தம்பி லஷ்மணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணருக்கு அண்ணன் பலராமராகவும் தோன்றினார் என்கின்றன புராணங்கள். அந்த ஆதிசேஷனே கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார் என்பது நம்பிக்கை.

1000மாவது பிறந்தநாள் விழா

1000மாவது பிறந்தநாள் விழா

ஸ்ரீ ராமானுஜர் கிபி 1017ஆம் ஆண்டு, அப்போது பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஸ்ரீபெரும்புதூரில் தோன்றினார். அவரது அவதார தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சிறப்பு தபால் தலை

சிறப்பு தபால் தலை

ராமானுஜரின் 1000வது பிறந்தநாள் விழாவை யொட்டி அவரது தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதனை வெளியிட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபட்டவர் ராமானுஜர் என புகழாரம் சூடினார்.

அனைவரும் சமம்

அனைவரும் சமம்

இறைவன் முன் எல்லோரும் சமம் என போதித்தவர் ராமானுஜர். மனித சமூகத்தில் பேதத்தை ஒழித்தவர் ராமானுஜர். சமுதாயம், மதம், தத்துவத்தை உள்ளடக்கியதே ராமானுஜரின் வாழக்கை எனவும் மோடி ஸ்ரீ ராமானுஜருக்கு புகழாரம் சூட்டினார்.

English summary
Various functions are being organized in Srirangam and Kanchipuram to culminate the 1000th birth anniversary of Vaishnavite saint Sri Ramanuja, the Acharya who gave the Navagranthas to the world.Prime Minister Narendra Modi also praised Saint Ramanujacharya
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X