ஜம்மு காஷ்மீரில் விபத்து: அமர்நாத் யாத்ரீகர்கள் 16 பேர் பலி- 30 பேர் படுகாயம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் 16 பேர் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்க்குதல் நடத்தினர். இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

11 Amarnath pilgrims killed in road accident

இந்த தாக்குதலில் 8 பேர் பலியாகினர். இந்த நிலையில் ஜம்மு- ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் சிக்கியோரை ராணுவத்தினர் மீட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
16 Amarnath pilgrims died in a road accident on Srinagar-Jammu National Highway.
Please Wait while comments are loading...