தப்பு, தப்பாக ஓட்டு போட்ட எம்.பிக்கள்.. துணை ஜனாதிபதி தேர்தலில் 11 வாக்குகள் செல்லாதவை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: துணை குடியரசு தலைவர் தேர்தலில் 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துணை குடியரசு தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ள நிலையில், அதில் 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பிக்கள் ஒழுங்காக ஓட்டுகூட போடத்தெரியாதவர்களாக உள்ளனரா என்ற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.

பாஜக, காங்கிரஸ்ஸ ஐயூஎம்எல் கட்சிகளின் தலா 2 எம்பிக்கள் வாக்களிக்கவில்லை. வெங்கையா நாயுடு 516 வாக்குகளையும், எதிர்த்து போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகளையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

11 were invalid in vice president election

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
M Venkaiah Naidu India's next vice president. Secures 516 votes. 11 were invalid in VP election.
Please Wait while comments are loading...