For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லிபியாவில் இருந்து மீட்கப்பட்டு பத்திரமாக ஊர் திரும்பிய 16 கேரள மாநிலத்தவர்கள்

By Siva
Google Oneindia Tamil News

கொச்சி: உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் சிக்கித் தவித்த கேரளாவை சேர்ந்த 16 பேர் இன்று பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர்.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் சிக்கித் தவித்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 29 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் லிபியாவில் இருந்து துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்நிலையில் துபாயில் இருந்து கேரளாவை சேர்ந்த 16 பேர் விமானம் மூலம் இன்று நெடும்பசேரி வந்து சேர்ந்தனர்.

விமான நிலையத்தில் கூடியிருந்த அவர்களின் உறவினர்கள் அவர்களை கண்டதும் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

இது குறித்து மோடி கேரளாவில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் கூறியதாவது,

நான் உங்களுக்கு நல்ல செய்தி கொண்டு வந்துள்ளேன். லிபியாவில் இருந்து மீட்கப்பட்ட கேரளாவை சேர்ந்த 6 குடும்பங்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 3 குடும்பங்கள் நாளை அல்லது நாளை மறுநாள் ஊர் திரும்புவார்கள் என்றார்.

English summary
It was an emotional homecoming for 16 Indians rescued from strife-torn Libya as they reached Nedumbaserry today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X