மத்தியப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகள்! ஆய்வில் ஏற்பட்ட உள்ள புதிய திருப்பம்
போபால்: மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் 'டைட்டானோசர்' எனப்படும் ஒருவகை டைனோசரின் 256 புதைப்படிவ முட்டைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது இந்த முட்டையில் கரு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஒருவேளை கரு கண்டுபிடிக்கப்பட்டால் இந்தியாவில் முதன் முதலில் இந்த பகுதிதான் கரு உள்ள முட்டை கண்டுபிடிக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்படும்.
டைனோசர்கள் பூமியில் சுமாராக 231 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 241 மில்லியன் ஆண்டுகள் வரை வாழ்ந்திருக்கின்றன. இவைகள் வாழந்த காலத்தில் பூமியை இவைகள்தான் தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இதில் தாவர உண்ணி, ஊன் உண்ணி என மொத்தம் 40 வகை டைனோசர்கள் இருக்கின்றன. இந்த டைனோசர்களின் உடல் அமைப்பு குறித்து தெரிந்துக்கொள்ளும் விதமாக நமக்கு அதன் எலும்பு கூடுகள் சில கிடைத்துள்ளன. இருப்பினும் ஒரு சில டைனோசரின் உடல் அமைப்பை சரியாக தெரிந்துகொள்ளும் அளவுக்கு இன்னும் நமக்கு போதுமான எலும்புகள் கிடைக்கவில்லை. இப்படி முழுமையாக அறிப்படாத டைனோசர்களில் ஒன்றுதான் 'டைட்டானோசர்'.
எனவே ஆய்வாளர்கள் 'டைட்டானோசரின்' மிக சரியான உடலமைப்பை கண்டுபிடிக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர். தற்போது நாம் சினிமாக்களில் பார்க்கும் டைனோசர்களுக்கும் உண்மையான டைனோசர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாரு இருக்கும் நிலையில்தான் தற்போது மத்தியப் பிரதேசத்தில் 'டைட்டானோசரின்' முட்டைகள் அதிக அளவில் கிடைத்திருக்கிறது.

டைட்டானோசர்
டைட்டானோசர் தாவர உண்ணி. அதாவது 'சௌரோபாட்' வகையை சேர்ந்தது. ஆனால் இதன் உயரமும் எடையும் மிக பிரமாண்டமானது. இது 7 மீட்டர் நீளமும் சுமாராக 10 ஆயிரம் கிலோ எடையும் கொண்டதாகும். ஆனால் இந்த இனத்தின் முழு எலும்புக்கூடும் தற்போது வரை கிடைக்கவில்லை என்பதால் இதனை அங்கீகரிக்கப்பட்ட ஒரு இனமாக கருத முடியாது என்றே ஆய்வாளர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த முட்டைகள் இந்த இனத்தை உறுதி செய்யும் என்று நம்புவதாக இந்த ஆய்வை மேற்கொண்ட தில்லி பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜிவிஆர் பிரசாத் கூறுகிறார்.

யுனெஸ்கோ
தார் பகுதியில் கடந்த 2017 முதல் 2020 ஆண்டு வரை டைனோசர்களின் பல்வேறு புதைப்படிமங்கள் கிடைத்துள்ளன. எனவே தார் மாவட்டத்தை அகடா, தோலியா ராய்புரியா, ஜபா, ஜம்னியாபுரா மற்றும் பட்லியா ஆகிய கிராமங்களுக்கு யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது முட்டைகளுடன் அதை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்ட கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை சுற்றி எங்கும் டைனோசரின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே டைனோசர்கள் வாழ்ந்த பகுதியும், முட்டையிடும் பகுதியும் வெவ்வேறு என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

முட்டை
அது மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் டைனோசர்கள் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது வரை எந்த முட்டையிலும் கரு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தற்போது தார் மாவட்டத்தில் கிடைத்துள்ள முட்டைகளில் கரு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது குறித்து பேராசிரியர் பிரசாத் கூறுகையில் "இந்த முட்டையின் ஓடுகள் இரண்டு முன்று அடுக்குகளாக இருக்கிறது. எல்லா முட்டைகளுக்கும் ஒரு அடுக்குதான் இருக்கும். ஆனால் இந்த பகுதியில் வாழ்ந்த டைனோசர்கள் மிகுந்த பதற்றத்துடன் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்திருக்கின்றன.

கரு
எனவே முட்டைகள் குறிப்பிட்ட காலத்திற்கு பிரசவமாகாமல் நாட்கள் தள்ளி பிரசவமாகியுள்ளன. இப்படியாகும் போது டைனோசரின் வயிற்றில் உள்ள முட்டைக்கு மேல் மேலும் ஒரு கால்சியம் லேயர் படிந்துள்ளது. இது ஓடாக மாறியுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள 256 முட்டைகளில் அநேகமான முட்டைகள் இப்படி இரண்டு மூன்று அடுக்குகளை கொண்டிருக்கின்றன. இதனை நாங்கள் ஸ்கேன் செய்ய தயாராகி வருகிறோம். ஒருவேளை இதில் கரு கண்டுபிடிக்கப்பட்டால் இந்த டைனோசர் குறித்த முழு விவரத்தையும் நம்மால் அறிந்துக்கொள்ள முடியும்" என்று கூறியுள்ளார்.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications