For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரகாண்ட் தேர்தல்: 4 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ500க்கு கீழ் சிலிண்டர் விலை- காங். வாக்குறுதி

Google Oneindia Tamil News

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ500க்கு கீழ் விற்பனை செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

70 இடங்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 36. பிப்ரவரி 14-ல் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியில் பாஜக உள்ளது. பாஜக அடிக்கடி முதல்வர்களை மாற்றியது, உச்சகட்ட உட்கட்சி பூசல் ஆகியவற்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவின் உட்கட்சிப் பூசலை பயன்படுத்திய ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய வாய்ப்புள்ள காங்கிரஸும் உள்ளடி வேலைகளால் திணறிக் கொண்டிருக்கிறது.

சவாலாக இருக்கும் ஆம் ஆத்மி

சவாலாக இருக்கும் ஆம் ஆத்மி

இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தல் களம் காணுகிறது. என்னதான் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவினாலும் இரு கட்சிகளுக்குமான வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி கபளீகரம் செய்யும் எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆம் ஆத்மியை இரு கட்சிகளுமே கடும் எதிரியாகப் பார்க்கின்றன.

கருத்து கணிப்புகள்

கருத்து கணிப்புகள்

உத்தரகாண்ட் மாநிலம தொடர்பான கருத்து கணிப்புகளில் ஒரு ஊசலாட்டம் வெளிப்படுகிறது. பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கிற பொதுத்தோற்றத்துடன் கருத்து கணிப்பு முடிவுகள் இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளை மறுப்பதற்கு இல்லை என்பதையும் அந்த கணி0ப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

இந்த நிலையில் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் டேராடூனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது உத்தரகாண்ட் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

என்ன வாக்குறுதிகள்?

என்ன வாக்குறுதிகள்?

இந்த தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில் 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்; சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ500க்கு கீழ் விற்பனை செய்யப்படும்; ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் குடும்பங்களுக்கு ரூ40,000 நிதி உதவி வழங்கப்படும். மாநில சுகாதார கட்டமைப்பு மேம்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

English summary
Ahead of Assembly Elections, Uttarakhand Congress promises 4 lakh jobs, LPG cylinder price below Rs 500.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X