4 டிராக்குகள், 3 ரயில்கள்.. நிமிடங்களில் நடந்த துயரம்.. நடுங்க வைத்த விபத்து.. நடந்தது இப்படித்தான்
புவனேஷ்வர்: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்தில் சிக்கியது. நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த ரயில் விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெறும் சில நிமிடங்களில் கோரமண்டல் எகஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் அந்த இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளன. அது குறித்த விவரங்களை பார்ப்போம்.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நேற்று மாலை ஒடிசா மாநிலம் பாலசோர் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்தபோது விபத்தில் சிக்கியது. ரயிலின் 8 பெட்டிகள் வரை தடம் புரண்டு கவிழ்ந்தது.

பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்து கிடந்தது. ரயிலில் பயணம் செய்த பயணிகள் விபத்தில் சிக்கி அபாயக்குரல் எழுப்பினர். நேற்று இரவு 7 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றதால் விபத்து மீட்பு பணிகளிலும் கடும் சிரமங்கள் இருந்தன. எனினும் விரைந்து வந்த மீட்பு படையினர் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரயில் தண்டவாளங்களில் ரத்தக்கறைகளும் சிதைந்த உடல்களும் என அந்த இடமே நெஞ்சை உறைய வைக்கும் விதமாக காட்சி அளித்தது. மீட்புக்குழுவினர் முழு வீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரயில் விபத்தில் இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். சுமார் 900 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். கோரமண்டல் ரயில் என்ஜின், 4 பெட்டிகள், 14 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதனால், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து நடைபெற்றது குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது:- சென்னை நோக்கி வந்து கொண்டிந்த கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு சரக்கு ரயில் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ரயில் பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்து இருக்கின்றன.
தடம் புரண்ட இந்த பெட்டிகள் மீது யெஸ்வந்த்பூர் - ஹவ்ரா அதிவிரைவு ரயில் மோதியிருக்கிறது. நேற்று மாலை 6.50 மணியில் இருந்து 7.10 க்குள் இந்த மொத்த துயரமும் நடந்துமுடிந்துள்ளது. ரயில் விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்து இருக்கும் நிலையில், ரயில்வே நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பிறகே ரயில் விபத்து நடைபெற்றது எப்படி? என்ற முழு விவரங்களும் தெரியவரும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications