சின்னப்பொண்ணு.. இந்த ஹிந்தி டீச்சர் அடங்கவேயில்லையே.. இப்ப 3 மாசம் வேற.. கிறுகிறுத்து போன போலீஸ்
கான்பூர்: ஒரு ஹிந்தி மாஸ்டரை காணோமாம்.. 17 வயது பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடியிருக்கிறார்.. 3 மாதமாக அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் போலீசார் விழிபிதுங்கி கொண்டிருக்கிறார்கள்.
நாளுக்கு நாள் வடமாநிலங்களில் பெண் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது.. பெண் குழந்தைகள் மீதான வன்முறையும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதில் முதன்மை மாநிலமாக உத்தரபிரதேசம், அடுத்ததாக மத்திய பிரதேசம் என பட்டியல் நீள்கிறது.

இதோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னொரு கொடுமை நடந்துள்ளது.. லக்னோவில் உள்ள கோண்டா மாவட்டத்தில் தேஹத் கோட்வாலி என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள பஹ்ரை என்ற இடத்தில் வசித்து வருகிறார் அந்த இந்தி ஆசிரியர்.. இவருக்கு 50 வயதாகிறது.
நெருக்கம்: இவரிடம் 17வயது மாணவி ஹிந்தி படிக்க வந்துள்ளார்.. அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தைகளை கூறி, மனதை கலைத்துள்ளார்.. காதலை வெளிப்படுத்தியதுடன், அந்த பெண்ணின் விருப்பத்தையும் பணிந்து பெற்றுள்ளார்.. மாணவியுடன் எல்லை மீறி இருக்கிறார்.. நெருக்கமாகவும் இருந்துள்ளார்..
திடீரென, அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு, தலைமறைவாகிவிட்டார். அந்த மாணவி வீட்டை விட்டு ஓடிப்போகும்போது, 30,000 ரூபாய் மற்றும் நகைகளை தன்னுடைய வீட்டில் இருந்து எடுத்து சென்றிருக்கிறார். மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் அவரை தேடி அலைந்திருக்கிறார்கள்.. எங்கேயுமே மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.
அதிர்ச்சி வீடியோ: இப்படிப்பட்ட சூழலில்துன், மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை ஹிந்தி டீச்சர், மாணவியின் பெற்றோருக்கும், கிராம மக்களுக்கும் அனுப்பி வைத்தார்.. இந்த வீடியோவை பார்த்ததுமே, உச்சக்கட்ட அவமானமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், தலையிலடித்து கொண்டு அழுதனர்.. அதற்கு பிறகு அவமானம் தாங்காமல், வீட்டை விட்டே அவர்கள் வெளியே வரவில்லை...
இந்த வீடியோ குறித்த தகவல் போலீசாருக்கு போனதையடுத்து, வழக்குப்பதிவு செய்து மாணவியை தேட துவங்கினர். ஆனால் 3 மாதமாகியும் அந்த பெண் கிடைக்கவில்லை..
உயர்பதவி: இதுகுறித்து பெண்ணின் அப்பா சொல்லும்போது, "ஹிந்தி வாத்தியார், என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில்தான் வசித்து வந்தார்.. என் மகளை, ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதாக சொன்னார்.. உயர் பதவியில் உட்கார வைப்பதாக சொன்னார்.. இப்போது, இப்படி ஒரு வீடியோவை அனுப்பிவைத்திருக்கிறார்..
எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.. எனவே, இது சம்பந்தமாக புகார் சொல்வதற்காக போலீசிடம் சென்றோம்.. ஆனால், அவர்கள் வழக்குப் பதிவு செய்யவே மறுத்தார்கள்.. எனவே, காவல்துறை தலைவரை நேரடியாக சந்தித்து முறையிட்டோம். அதற்கு பிறகே வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்" என்று கலங்கியபடி சொன்னார்.
ரயில்வே ஸ்டேஷன்: இதுகுறித்து கோண்டா போலீஸார் சொல்லும்போது, "தலைமறைவான ஆசிரியரை தேடி கொண்டிருக்கிறோம்.. அவரது விவரங்களையும் சேகரித்து வருகிறோம்... பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன் போன்ற பகுதிகளில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்..
அந்த ஹிந்தி டீச்சர், தன்னுடைய இடத்தை உடனுக்குடன் மாற்றிக் கொண்டே இருக்கிறார், அதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், அவரை விரைவில் பிடித்துவிடுவோம், மாணவியை மீட்டுவிடுவோம்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.. மாயமான மாணவிக்கு 17 வயதுதான் ஆகிறது.. அதனால், ஹிந்தி டீச்சர் போலீசில் சிக்கினால், எப்படியும் போக்சோதான்..!!!
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications