கர்நாடகாவில் புதையலுக்காக கேரள சிறுவனை உயிரோடு புதைத்து நரபலி கொடுக்க முயற்சி- 7 பேர் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

மைசூர்: புதையலுக்காக கேரளா மாநில சிறுவனை நரபலி கொடுக்க முயற்சித்ததாக 7 பேரை கர்நாடகா போலீசார் கைது செய்துள்ளனர்.

மைசூர் அருகே எம்மரகாலாவைச் சேர்ந்த சுதீந்திராவிடம் சிறுவனை உயிரோடு புதைத்து நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என ஒரு ஜோதிடர் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனை நரபலிக்காக கடத்தி வந்துள்ளது சுதீந்தரா அண்ட் கோ.

7 arrested for trying to bury 11-year-old alive in Karnataka

சுதீந்தராவின் சந்தேகமான நடவடிக்கை குறித்து பொதுமக்கள் போலீசில் தெரிவித்தனர். இதையடுத்து சுதீந்தராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதன் முதல் கட்ட விசாரணையில் சிறுவனை புதையலுக்காக நரபலி கொடுக்க இருந்ததாக ஒப்புக் கொண்டார் சுதீந்தரா. இதையடுத்து சுதீந்தரா, ஜோதிடர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

தற்போது கேரளா சிறுவன், இந்த கும்பலிடம் சிக்கியது எப்படி என விசாரித்து வருகின்றனர் போலீசார்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Seven men were arrested for trying to bury an 11-year-old boy alive in a bid to receive fortunes from the diety in Mysore.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற