தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட நாடு முழுவதும் 75 ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது: மத்திய அமைச்சர் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினருடன் தொடர்புடைய 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹன்ஸ்ராஜ் ஆஹிர் மாநிலங்களவையில் கூறியதாவது: தேசிய புலனாய்வு அமைப்பினர் மற்றும் மாநில போலீசார் அளித்த தகவல்கள் படி நாடு முழுவதும் ஐ.எஸ்.இயக்கத்துடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

75 arrested for alleged links with ISIS, says central Government

இவர்களில் 21 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள், 16 பேர் தெலுங்கான மாநிலத்தை சேர்ந்தவர்கள், 9 பேர் கர்நாடக, 8 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள், 6 பேர் மத்திய பிரதேசம், 4 பேர் உத்தரகாண்ட், 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள், 2 பேர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள், மேற்கு வங்காளத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A total of 75 people were arrested from different states for alleged links with dreaded terror group ISIS, the Centre said today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற