உத்தரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட 12வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் இந்திரா நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இரவு நேரத்தில் தண்ணீர் பிடித்துவிட்டு வந்த அவரை அப்பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்த 25 வயது இளைஞர் அந்த சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தார். இதனை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

கற்பமான சிறுமி

கற்பமான சிறுமி

இந்நிலையில் அந்த சிறுமி கற்பமடைந்தார். இது பெற்றோருக்கு தெரியவரவே நடந்ததையும் மிரட்டப்பட்டதையும் கூறினார் சிறுமி.

இளைஞர் கைது

இளைஞர் கைது

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கலைக்க முடியவில்லை

கலைக்க முடியவில்லை

இதைத்தொடர்ந்து அந்த சிறுமியின் கருவை கலைக்க முயன்றனர். ஆனால் நாட்கள் கடந்ததால் கருவை கலைக்க முடியாமல் போனது.

சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை

சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை

இந்நிலையில் அந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2.3 கிலோ எடையில் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை வேண்டாம்

குழந்தை வேண்டாம்

ஆனால் அந்த குழந்தை தனக்கு வேண்டாம் கூறி வருகிறார் அந்த சிறுமி. தந்தையை இழந்த மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்த அந்த பெண் மற்றும் அவரது தாயார் ஒருவர் வருமானத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவதே கஷ்டம் இதில் எப்படி குழந்தையை வளர்ப்பது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அந்த சம்பவம் நினைவுக்கு..

அந்த சம்பவம் நினைவுக்கு..

குழந்தையை பார்க்கும்போதெல்லாம் தனது வாழ்க்கையில் நடந்த அந்த கொடூர சம்பவம் தான் நினைவுக்கு வருவதாகவும் அந்த சிறுமி கதறுகிறார். மேலும் சமூகத்தில் இந்த குழந்தையை வளர்ப்பது கடினம் என்றும் அவர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 12 years old raped victim gave birth to a boy in UP. The girl dont want the boy baby. The 12 year old girl raped by neiubour last year.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற