ஐபிஎஸ் அதிகாரி ரூபா மீது நிச்சயம் வழக்கு தொடரப்படும்... டிடிவி தினகரன் திட்டவட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டிய ஐபிஎஸ் அதிகாரி ரூபா மீது நிச்சயம் வழக்கு தொடரப்படும் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சிறையில் சசிகலாவை டிடிவி தினகரன் இன்று சந்தித்தார். இதைத்தொடர்ந்து சிறை வளாகத்துக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

A case will be filed on DIG Roopa for accusing sasikala

அப்போது சிறையில் தனது சித்தியான சசிகலாவை அக்காள் மகன் என்ற முறையில் சந்தித்து நலம் விசாரித்ததாக கூறினார். மேலும் சசிகலாவுக்கு சிறையில் எந்த சிறப்பு சலுகைகளும் வழங்கப்படவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

முன்பெல்லாம் அரை மணி நேரத்தில் சித்தியை சந்தித்துவிடுவேன் தற்போது ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் சிறையில் எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் வசதியும் செய்து தரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மற்ற கைதிகளைப் போலதான் சசிகலா நடத்தப்படுவதாக கூறிய டிடிவி தினகரன் மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ அதுவே சசிகலாவுக்கும் கொடுக்கப்படுவதாக கூறினார்.

சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டிய ஐபிஎஸ் அதிகாரி ரூபா மீது நிச்சயம் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறினார். இதுகுறித்து புகழேந்தி கர்நாட முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பதையும் டிடிவி தினகரன் சுட்டிக்காட்டினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran said that A case will be filed on DIG Roopa for accusing sasikala getting special facilities in the jail. He also said no special facility given to Jayalalitha.
Please Wait while comments are loading...