டெல்லியில் செல்பி எடுப்பதற்காக துப்பாக்கி வைத்து விளையாடிய இளைஞர்.. தவறுதலாக சுட்டு மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  துப்பாக்கி வைத்து செல்பி எடுத்த இளைஞர் மரணம் ???- வீடியோ

  டெல்லி: டெல்லியில் செல்பி எடுப்பதற்காக துப்பாக்கி வைத்து விளையாடிய பிரசாந்த் சௌகான் என்ற இளைஞர், தவறுதலாக தன்னை தானே சுட்டு மரணம் அடைந்துள்ளார்.

  இந்த சம்பவத்தில் அந்த இளைஞருக்கு அருகில் இருந்த சிறுவன் ஒருவருக்கும் அடிபட்டு இருக்கிறது. அந்த சிறுவனின் தந்தை பிரமோத் சௌகான் பாதுகாப்பிற்காக லைசென்ஸுடன் வாங்கி வைத்து இருக்கும் துப்பாக்கி ஆகும் இது.

  மரணமடைந்த பிரசாந்த் உத்தர பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  உறவினர்

  உறவினர்

  உத்தர பிரதேசத்தில் இருந்து பிரசாந்த் சௌகான், தன் உறவினர் பிரமோத் சௌகான் வீட்டிற்கு சென்று இருக்கிறார். அவர் வீட்டில் இல்லாத போது இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அவரது மகனான 11வது படிக்கும் பள்ளி மாணவனுக்கு இந்த குற்றத்தில் பங்கு இருக்கிறது.

  துப்பாக்கி வைத்து செல்பி

  துப்பாக்கி வைத்து செல்பி

  அந்த சிறுவன்தான் அப்பாவிற்கு தெரியாமல் அவரது துப்பாக்கியை எடுத்து வந்து இருக்கிறான். செல்பி எடுக்க வேண்டும் என்று துப்பாக்கியை எடுத்துள்ளான். அதை வைத்து வித விதமாக செல்பியும் எடுத்து இருக்கிறார்கள்.

  சுட்டார்

  சுட்டார்

  ஆனால் கடைசி செல்பி எடுக்கும் போது கைதவறி துப்பாக்கியில் சுட்டு இருக்கிறார். துப்பாக்கி ஏற்கனவே லோட் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பிரசாந்த் சௌகான் அந்த இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கிறார். அந்த சிறுவனுக்கும் காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

  விசாரணை நடத்துகிறார்கள்

  விசாரணை நடத்துகிறார்கள்

  தற்போது இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசுக்கு இந்த விஷயத்தில் நிறைய சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது. துப்பாக்கிக்கு சொந்தக்காரரான பிரமோத் சௌகானிடம் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A man named Prashant Chauhan in Delhi shots himself accidentally while taking selfie with Gun.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற