50 பேர் சீரழித்தனர்.. கேரள சிறுமியின் பரபரப்பு புகார்.. மலையாள டிவி நடிகர்களுக்கும் தொடர்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சிறுமி ஒருவர், விபசார கும்பலிடம் சிக்கி கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த சிறுமி தற்போது 7 மாத கர்ப்பமாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

திருவனந்தபுரம் அருகே குத்திக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி விழிம்பில்சாலா போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரை கண்ட போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த புகாரில், விழிம்பில் சாலா பகுதியைச் சேர்ந்த விஷ்ணுசாகர் ,28 என்ற இளைஞர் தன்னை காதலித்து, அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை சீரழித்து விட்டார்.

7 மாத கர்ப்பம்

7 மாத கர்ப்பம்

விஷ்ணுசாகர் தன்னுடன் பலமுறை நெருக்கமாக இருந்ததால் தற்போது தான் 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், ஆனால் தன்னை அந்த இளைஞர் திருமணம் செய்ய மறுப்பதாகவும் அந்த புகாரில் சிறுமி கூறியிருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுசாகரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

விபசார கும்பலிடம்...

விபசார கும்பலிடம்...

இதுகுறித்து விஷ்ணு சாகர் போலீஸில் கூறுகையில் தன் மீது பலாத்கார புகார் கூறிய சிறுமி விபசார கும்பலிடம் சிக்கி சீரழிக்கப்பட்டவர். அவரை கடந்த இரண்டரை ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலாத்காரம் செய்துள்ளதாக அவர் கூறினார்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

போலீஸார் மேலும் விசாரணை நடத்தியதில் குத்திக்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகலா (40) அந்த சிறுமியின் வறுமையை பயன்படுத்தி பணத்தாசைக் காட்டி அவரை விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார் என்பதும் அவருக்கு உடந்தையாக ஷாஜிதாபீவி (45). ஆட்டோ டிரைவர்கள் சதாசிவன் (64), சுரேஷ் (24) ஆகியோரும் செயல்பட்டு உள்ளதும் தெரியவந்தது.

ஆட்டோவிலேயே...

ஆட்டோவிலேயே...

விபசாரத்துக்காக அந்த சிறுமியை ஆட்டோ டிரைவர்கள் சதாசிவன், சுரேஷ் ஆகியோர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஆட்டோவிலேயே அந்த சிறுமியை அவர்கள் இருவரும் சீரழித்தனர். இந்த நிலையில் விஷ்ணுசாகரும் விபசாரத்துக்காக சிறுமியை தேடி சென்றுள்ளார்.

கர்ப்பம்

கர்ப்பம்

அந்த சிறுமியுடன் பலமுறை விஷ்ணு சாகர் நெருக்கமாக இருந்ததால் அவர் கர்ப்பமானார். இதனால் அந்த சிறுமியை விஷ்ணுசாகர் திருமணம் செய்து கொள்ள அந்த கும்பல் நிர்பந்தித்தபோது அவர் சம்மதிக்காததால் அந்த சிறுமியை தூண்டிவிட்டு இளைஞர் மீது பாலியல் புகார் கூறியதும் தெரியவந்தது.

Minor girl was abducted in Pakistan and converted to Islam-Oneindia Tamil
4 பேர் கைது

4 பேர் கைது

இதைத் தொடர்ந்து விபசார கும்பலைச் சேர்ந்த ஸ்ரீகலா, ஷாஜிதாபீவி, சதாசிவன், சுரேஷ் ஆகியோரை கைது செய் தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது அந்த சிறுமியை சீரழித்தவர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. கேரள டிவி நடிகர்கள் சிலரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்த தகவலும் போலீஸாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A minor girl was trapped to sex racketeers and she was abused by 50 more within 2 years. Police arrested sex racketeers and investigation going on.
Please Wait while comments are loading...