இந்து பெயர் வைத்துள்ளதாக கூறி..முஸ்லிம் நடத்திய ஹோட்டலை அடித்து நொறுக்கிய கும்பல்.. உ.பி.யில் ஷாக்!
மதுரா: உத்தரபிரதேசத்தில் இந்து பெயரில் ஹோட்டல் நடத்துவதாக கூறி முஸ்லிம் ஹோட்டலை மர்ம கும்பல் அடித்து நொறுக்கினார்கள்,. இது தொடர்பாக புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா விகாஸ் மார்க்கெட்டில் இர்பான் என்பவர் 'ஸ்ரீநாத்' என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஒரு முஸ்லிம் இந்து பெயரில் எப்படி உணவகம் நடத்தலாம்? எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

கும்பல் அராஜகம்
இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி இந்த ஹோட்டலுக்கு வந்த மர்ம நபர்கள் சிலர், ஹோட்டலுக்கு 'ஸ்ரீநாத்' என்று ஏன் பெயரிடப்பட்டது என்று விசாரித்தனர். பின்னர் அவர்கள் 'ஸ்ரீநாத்' என்ற பெயர் கொண்ட ஹோட்டலின் பேனர்களை கிழித்து எறிந்தும், டேபிள்களை தூக்கி எறிந்தும், அடித்து நொறுக்கியும் அராஜகம் செய்துள்ளனர். மேலும், 'ஸ்ரீநாத்' என்று பெயரிடப்பட்டுள்ளதால், ஹோட்டலுக்கு இந்துக்கள் சாப்பிட வருவார்கள்.

பொருளாதார ஜிஹாத்
எனவே விகாஸ் மார்க்கெட்டில் இனிமேல் ஹோட்டல் நடத்தக்கூடாது என்று மிரட்டலும் விடுத்துச் சென்றனர். இந்த கும்பலை வழிநடத்திய தேவராஜ் பண்டிட் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், ' இவரை(இர்பான்) போன்றவர்களால் இந்துக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. சனாதன தர்மத்தின் உதவியை நாடும் இத்தகைய விற்பனையாளர்களுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும் என்றும் இது பொருளாதார ஜிஹாத் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போலீசில் புகார்
இந்த சம்பவம் தொடர்பாக மதுராவின் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஹோட்டலின் உரியமையாளர் இர்பான் கூறியதாவது:- நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹோட்டலை நடத்தி வருகிறோம். இதுவரையிலும் பெயரில் எந்த பிரச்சனையும் இல்லை.

கற்பனை கூட செய்யவில்லை
ஒரு பெயரில் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று நாங்கள் கற்பனை கூட செய்யவில்லை. ஹோட்டலுக்கு வந்த மர்ம கும்பல் பேனர்களை கிழித்து முஸ்லீம் மக்கள் இந்து பெயருடன் ஒரு கடையை நடத்த முடியாது என்று கூறினார்கள். இந்த பெயரில்தான் அவர்களுக்கு பிரச்சினையே உள்ளது என்று இர்பான் கூறினார். முஸ்லிம் ஹோட்டலை சூறையாடிய சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications