23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகள்.. டார்க் பிங்க், பச்சை நிறத்தில் அறிமுகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பச்சை நிறத்தில் மீண்டும் வந்த ஒரு ரூபாய் நோட்டு!- வீடியோ

  டெல்லி: ஒரு ரூபாய் நோட்டுகள் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  இந்தியாவில் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் முறை 1994ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, ஒரு ரூபாய் நாணயங்களே புழக்கத்தில் இருந்து வருகிறது.

  பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் காணாமல்போன நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  புதிய நோட்டுகள் புழக்கம்

  புதிய நோட்டுகள் புழக்கம்

  கடந்த மே மாதம் புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது, புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன.

  டார்க் பிங்க் மற்றும் கிரீன்

  டார்க் பிங்க் மற்றும் கிரீன்

  இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் பழைய வடிவமைப்பையே ஒத்திருக்கிறது. ஆனாலும் அடர் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் உள்ளன.

  ஆர்பிஐ கவர்னர் கையெழுத்து

  ஆர்பிஐ கவர்னர் கையெழுத்து

  10 ரூபாய் நோட்டு மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும். அதில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும்.

  அரசே நேரடியாக

  அரசே நேரடியாக

  ஆனால் ஒரு ரூபாய் நோட்டை அரசே நேரடியாக வெளியிடும். அதில், மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும்.

  சக்திகாந்த் தாஸ் கையெழுத்து

  சக்திகாந்த் தாஸ் கையெழுத்து

  அந்த வகையில், புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஒரு ரூபாய் நோட்டில் மத்திய நிதித்துறை செயலாளர் சக்திகாந்த் தாசின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது. நோட்டின் வலது பக்க அடிப்பகுதியில் கறுப்பு நிறத்தில் எண்கள் இடம் பெற்றுள்ளன.

  தமிழகத்தில் புழக்கம்

  தமிழகத்தில் புழக்கம்

  மேலும், நோட்டின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட ஆண்டாண 2017 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் புழக்கத்துக்கு வந்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A new one rupee note has been released by RBI. These new banknotes resemble the old design. But the new banknotes in the dark pink and green color.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற