2 டோஸ் தடுப்பூசியும் போட்ட பெண் டாக்டருக்கு ஒரே நேரத்தில் 2 வகை கொரோனா பாதிப்பு! ஈஸியாக குணமடைந்தார்
கவுகாத்தி: அசாமில் ஒரு பெண் மருத்துவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் இவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவராம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் திப்ருகரில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் (ஆர்.எம்.ஆர்.சி) இவருக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் பெண் மருத்துவர் இரண்டு வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு கொரோனா வைரஸின் ஆல்பா மற்றும் டெல்டா வகைகளால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

குணமடைந்தார்
அதேநேரம், மோசமான வகையில் அவர் உடல்நிலை பாதிக்கப்படவில்லை. லேசான அறிகுறிகள் இருந்துள்ளது. மருத்துவமனையில் சேராமல் வீட்டிலிருந்தே குணமடைந்தார். தடுப்பூசி வேலை செய்ததால்தான் லேசான பாதிப்புடன் பெண் டாக்டர் குணமடைந்தார் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

எப்படி பரவியது
"இரண்டு வகைகள் ஒரே நேரத்தில் அல்லது மிகக் குறுகிய காலத்திற்குள் ஒரு நபரை பாதிக்கும்போது இரட்டை தொற்று ஏற்படுகிறது. யாரோ பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இது நடக்கிறது. ஆனால் முதல் நோய்த்தொற்றின் 2-3 நாட்களுக்குள் மற்றும் ஆன்டிபாடிகள் உருவாகுவதற்கு முன்பு மற்றொரு கொரோனா பாதித்த நபரிடமிருந்து வேறு வகை கொரோனா இவருக்கு பரவியிருக்கலாம். எனவே இரு வகை கொரோனாவும் உடலில் இருந்திருக்கும் "என்று ஆர்.எம்.ஆர்.சி.யின் மூத்த விஞ்ஞானி டாக்டர் பி ஜே போர்ககோட்டி தெரிவித்துள்ளார்.

மருத்துவர்
மருத்துவ தொழிலில் இருப்பதால் அடிக்கடி நோயாளிகளை சந்திக்க வேண்டியிருக்கும் சூழ்நிலையில் இது போல உடனடியாக இரண்டு வகை வைரஸ் தாக்கி இருக்கக்கூடும் என்று சொல்கிறார்கள். இது மிகவும் அரிதான நிகழ்வு என்பதால் சாமானிய மக்கள் அது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

இரு வகை வைரஸ் தாக்கத்தில் அசாம்
இந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அசாமில் இரண்டாவது அலையின் ஆரம்ப கட்டத்தில், பெரும்பாலான கொரோனா கேஸ்கள் ஆல்பா உருமாற்ற வைரஸ் காரணமாக இருந்தன என்று மேலும் அவர் கூறினார். ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, டெல்டா நோய்த்தொற்றுகள் தொடர்பான கேஸ்கள் வெளிவரத் தொடங்கின.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications