ஷாக்! நள்ளிரவு பர்த் டே பார்ட்டி..ப்ளான் போட்ட நண்பர்கள்! பூட்டிய அறைக்குள் சீரழிக்கப்பட்ட இளம்பெண்!

Subscribe to Oneindia Tamil

போபால் : மத்திய பிரதேச மாநிலம் புனே அருகே ஆண் நண்பர்கள் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த இளம் பெண்ணையே அவர்கள் நண்பர்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் 2020ஆம் ஆண்டைக் காட்டிலும், 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில், பெண்கள் குறிப்பாக 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 46% அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டை விட ஆண்டில், ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 13,618 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்துள்ளது. அதேபோல், 2021ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெண்களுக்கு எதிராக 19,953 குற்றங்கள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

 குற்றங்கள் அதிகரிப்பு

குற்றங்கள் அதிகரிப்பு

வட மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், அந்த அளவுக்கு நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மத்திய பிரதேசத்தில் சீரான எண்ணிக்கையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மபியில் அதிர்ச்சி

மபியில் அதிர்ச்சி

அந்த வகையில் தன் நண்பர்களாலேயே இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் தான் தற்போது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் நெருக்கம் மிகுந்த புனே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் கடந்த அக்டோபர் 13ம் தேதி தனது தோழியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் தனக்கு நெருக்கமான மூன்று ஆண் நண்பர்களையும் இரண்டு பெண் நண்பர்களையும் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மயக்க மருந்து

மயக்க மருந்து

ஆனால் தோழி என்றும் பாராமல் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என அந்த மூன்று நபர்களும் ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு விருந்து நடந்து கொண்டிருந்தபோது அந்த இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த அந்த மூன்று பேரும் அவரை தனி அறையில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதை அடுத்து சுயநினைவு திரும்பி எழுந்த அந்த பெண் தான் தனது நண்பர்களாலே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை உணர்ந்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

 அதிரடி கைது

அதிரடி கைது

முதலில் இதுகுறித்து புகார் அளிக்காத நிலையில் ஒரு கட்டத்தில் அவர்கள் மீண்டும் தொந்தரவு செய்ய முயற்சித்ததால் மிகுந்தெழுந்த அந்த பெண் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+