For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஞ்சாப் ஓவர்.. அடுத்த இந்த மாநிலம்தான்..காங்கிரசுக்கு வசமாக செக் வைக்கும் ஆம் ஆத்மி.. என்ன திட்டம்?

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: பஞ்சாப் வெற்றியை தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சி சத்தீஸ்கார் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க குறிவைத்துள்ளது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம்ஆத்மி அங்கு புதிதாக அலுவலகம் திறந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடித்தது. கட்சி துவக்கிய 10 ஆண்டுகளில் 2வது மாநிலத்தில் ஆம்ஆத்மி வெற்றி கொடி நாட்டியுள்ளது. ஆம்ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக உருவாக்கவும், பாஜக, காங்கிரசுக்கு மாற்று என நிரூபிக்கவும் ஆம்ஆத்மி முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதனால் தான் கோவா, பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநில சட்டசபை, பாராளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். இதில் பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த நிலையில் கோவாவில் 2 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

பஞ்சாப் வெற்றி எப்படி

பஞ்சாப் வெற்றி எப்படி

பஞ்சாப்பை பொறுத்தவரை மொத்தம் 117 தொகுதிகள் உள்ளன. இங்கு நடந்த தேர்தலில் ஆம்ஆத்மி 92 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளிலும், எஸ்ஏடி 3, பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது ஆம்ஆத்மி 72 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றுள்ளது. ஆம்ஆத்மி சார்பில் பகவந்த் மான் முதல்வராகவும், 10 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர்.

சத்தீஸ்காரில் கவனம்

சத்தீஸ்காரில் கவனம்

பஞ்சாப்பில் தனித்து ஆட்சியை பிடித்திருப்பது பிற மாநில ஆம்ஆத்மி கட்சியினருக்கு ஊக்கமளித்துள்ளது. இதனால் அங்கு கட்சியினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சத்தீஸ்கார் மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஆம்ஆத்மி அதிக கவனம் செலுத்துகிறது. இங்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதை கவனத்தில் கொண்டு ஆம்ஆத்மி செயல்பட துவங்கியுள்ளது.

தலைமை அலுவலகம் திறப்பு

தலைமை அலுவலகம் திறப்பு

இதன் ஒருபகுதியாக ஆம்ஆத்மி கட்சியின் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய், புராரி எம்எல்ஏ சஞ்சீவ் ஷா ஆகியோர் இருநாள் சுற்றுப்பயணமாக இன்று சத்தீஸ்கார் சென்றுள்ளனர். இவர்கள் தலைநகர் ராய்ப்பூரில் ஆம்ஆத்மி கட்சியின் சத்தீஸ்கார் மாநில தலைமை அலுவலகத்தை திறந்து வைக்கின்றனர்.

ஆலோசனை

ஆலோசனை

அதன்பிறகு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். மாநில நிலவரம், கட்சியின் பலம் குறித்து விவாதிக்க உள்ளனர். நாளை ராய்ப்பூரில் விஜய் யாத்திரை என்ற பெயரில் பஞ்சாப் மாநில ஆம்ஆத்மி வெற்றியை கொண்டாடும் வகையில் கட்சியினர் ஊர்வலம் செல்ல உள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 அடுத்த ஆண்டு போட்டி

அடுத்த ஆண்டு போட்டி

இதுகுறித்து டெல்லி ஆம்ஆத்மி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால்ராய் கூறுகையில், ‛‛அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சத்தீஸ்கார் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நிலவரம் குறித்து அறிய வந்துள்ளோம். பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக நாங்கள் இருப்போம். சத்தீஸ்காரில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்தது. இதற்கு மாற்றாக கடந்த தேர்தலில் காங்கிரஸை மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

உட்கட்சி பூசல்

உட்கட்சி பூசல்

தற்போதைய மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் கட்சி முழுமையாக தோல்வியடைந்துள்ளது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை. மாநிலம், மக்களின் நலனை காங்கிரஸ் கட்சி மறந்துள்ளது. அதேநேரத்தில் கட்சிக்குள் உட்கட்சி பூசல் உள்ளது. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் விரக்தியில் உள்ளனர். முந்தைய பாஜக ஆட்சியை போன்று தான் காங்கிரசும் ஆட்சி செய்கிறது. இதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். மக்களின் மாற்றமாக நாங்கள் இருப்போம்'' என நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த முறை எப்படி

கடந்த முறை எப்படி

சத்தீஸ்கார் மாநிலத்தில் கடந்த 2018 ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 85 இடங்களில் ஆம்ஆத்மி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. தற்போது 2வது முறையாக சத்தீஸ்கார் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சி தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் களத்திலும்...

குஜராத் களத்திலும்...

முன்னதாக இந்த ஆண்டு இறுதியில் 182 தொகுதிகள் உள்ள குஜராத்திலும் ஆம்ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட உள்ளனர். இதற்கான பணிகள் அங்கு துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் அவரது செல்வாக்கை உடைத்து சட்டசபையில் கால்பதிக்க ஆம்ஆத்மி முயன்று வருகிறது.

English summary
Aam Aadmi eyes on Congress ruled Chhattisgarh, After landslide victory in Punjab assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X