For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தகுதி நீக்கத்தை எதிர்த்து டெல்லி ஹைகோர்ட்டில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் வழக்கு- மார்ச் 20-ல் விசாரணை

தகுதி நீக்கத்தை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மார்ச் 20-ந் தேதி விசாரணை நடைபெறுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தகுதி நீக்கத்தை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மார்ச் 20-ந் தேதி விசாரணை நடைபெறுகிறது.

அமைச்சர்களின் செயலாளர்கள் என்கிற பார்லிமென்ட் செக்ரெட்டரி பதவி வகித்த 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தகுதி நீக்கம் செய்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 AAP withdraws plea on MLAs' disqualification

இதனிடையே 20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கும் செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு தடை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆகையால் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு தடை கோரும் மனுவைத் திரும்பப் பெறுகிறோம் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் திருத்தப்பட்ட புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்ய இருக்கிறோம் எனவும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை மார்ச் 20-ந் தேதி நடைபெறும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

English summary
The Aam Aadmi Party has withdrawn the plea seeking interim relief for its 20 disqualified MLAs. The party will file a fresh petition in the Delhi High Court seeking quashing of the order disqualifying its MLAs,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X