For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் குழந்தைக்கு தாயான ஆசிட்வீ்ச்சில் முகம் வெந்துபோன லக்ஷ்மி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லியில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான லக்ஷ்மி ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த லக்ஷ்மிக்கு(26) 16 வயது இருக்கையில் அவரை விட வயதில் பெரியவரான ஒருவரின் காதலை அவர் ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த நபர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் லக்ஷ்மி மீது ஆசிட் வீசினார். இதில் லக்ஷ்மியின் முகம், உடல் வெந்து போனது.

Acid attack survivor Laxmi introduces her daughter to the world

உயிர் பிழைத்த லக்ஷ்மியை ஆலோக் தீக்சித்(28) என்பவர் காதலித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து ஆசிட் வீச்சுக்கு எதிரான பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஆலோக்கிற்கு திருமணம் மீது நம்பிக்கை இல்லாததால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் லக்ஷ்மி கடந்த மார்ச் மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு பிஹு என்று பெயர் வைத்துள்ளனர்.

குழந்தை மார்ச் மாதம் பிறந்தபோதிலும் தற்போது தான் அதை அறிவித்துள்ளனர். லக்ஷ்மியின் தந்தையும், சகோதரரும் அண்மையில் மரணம் அடைந்துள்ளனர். அதனாலும் லக்ஷ்மியும், ஆலோக்கும் பிசியாக இருந்ததாலும் குழந்தையை உலகிற்கு இத்தனை நாட்களாக அறிமுகப்படுத்தவில்லை.

ஆலோக் கூறுகையில்,

எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அதனால் நாங்கள் இப்படி தான் இருப்போம். சமூகத்தில் இருவர் ஒன்றாக சேர்ந்து வாழ திருமண சான்றிதழ் தேவை இல்லை என்றார்.

English summary
Disfigured beyond recognition in a terrible acid attack, 26-year-old Laxmi who goes by a single name has now turned a mother with her partner, a social activist who works for the welfare of acid attack victims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X