நடிகை கடத்தல் வழக்கு.. 6 மணி நேரம் துருவி துருவி விசாரணை.. கதறி அழுத காவ்யா மாதவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பிரபல நடிகை கடத்தல் வழக்கில் 6 மணிநேர போலீஸ் விசாரணையில் நடிகையும் சிறையில் உள்ள நடிகர் திலீப் மனைவியுமான காவ்யா மாதவன் கதறி அழுதார்.

கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் கடந்த மாதம் 10ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும், வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் திலீப் மனைவி காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் துருவி துருவி சரமாரியான கேள்விகளை போலீசார் கேட்டுள்ளனர்.

அடித்துச் சொன்ன காவ்யா

அடித்துச் சொன்ன காவ்யா

அப்போது, காவ்யா மாதவன் நடிகை கடத்தல் சம்பவம் தொடர்பாக எதுவுமே தெரியாது என்று கூறினார். பல்சர் சுனிலை தனக்குத் தெரியவே தெரியாது என்று அடித்துக் கூறியுள்ளார் காவ்யா மாதவன்.

மீண்டும் விசாரணை

மீண்டும் விசாரணை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடூர் கோபாலகிருஷ்ணனின் படப்பிடிப்பு தளத்திற்கு பல்சர் சுனில் வந்துள்ளார். அப்போது காவ்யா மாதவன், பல்சர் சுனில் ஓட்டிய காரில் அடிக்கடி சென்றார். இந்தத் தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்துள்ளதால் காவ்யா மாதவனுடன் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Kavya Madhavan shed tears in police investigation-Oneindia Tamil
கதறி அழுத காவ்யா

கதறி அழுத காவ்யா

போலீசார் தொடர்ந்து கிடிக்குப்பிடி கேள்விகளைத் தொடுத்ததால் காவ்யா மாதவனால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் விசாரணையின் போது அவர் கதறி அழுததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரிமி டோமியிடமும் விசாரணை

ரிமி டோமியிடமும் விசாரணை

இதே வழக்கு தொடர்பாக மலையாள பாடகியும், நடிகையுமான ரிமி டோமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அமெரிக்காவில் நடந்த கலை நிகழ்ச்சி குறித்து சரமாரி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததாகப் போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police has inquired Kavya Madhavan in Actress abduction case.
Please Wait while comments are loading...