பிரதியுஷாவை பலாத்காரம் செய்து கொன்று விட்டனர்... 15 ஆண்டுகளாக நீதி கேட்டு கதறும் தாய்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பிரதியுஷாவை பலாத்காரம் செய்து கொன்று விட்டனர்...அம்மா கதறல்-வீடியோ

  ஹைதராபாத்: என் மகள் தற்கொலை செய்யவில்லை. அவளை பலாத்காரம் செய்து விஷத்தை ஊற்றி கொலை செய்துவிட்டனர் என்று நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

  தமிழில் முரளியுடன் மனுநீதி என்ற படத்தில் நடித்தவர் பிரதியுஷா. நடிகர் பிரபுவுடன் 'சூப்பர் குடும்பம்', விஜயகாந்த்துடன் தவசி', உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

  தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மக்களின் மனதில் நன்றாக பதிந்தவர் நடிகை பிரதியுஷா. சிரித்துக்கொண்டே பேசும் வசனங்கள் அதிக அளவில் ரசிகர்களை ரசிக்கச் செய்தது. தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

  விஷம் குடித்த பிரதியுஷா

  விஷம் குடித்த பிரதியுஷா

  பிரதியுஷா தனது குடும்பத்துடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். கடந்த 2002ம் ஆண்டு பிரதியுஷா மர்மமான முறையில் மரணம் அடைந்தார். தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் சித்தார்த் என்பவருடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

  நீதிமன்றத்தில் வழக்கு

  நீதிமன்றத்தில் வழக்கு

  உயிருக்குப் போராடிய காதலன் பிழைத்து விட்டார். இதன் வழக்கு 15 ஆண்டுகாலமாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரதியுஷாவின் அம்மா சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  கொலை செய்யப்பட்ட பிரதியுஷா

  கொலை செய்யப்பட்ட பிரதியுஷா

  என் மகள் தற்கொலை செய்யவில்லை. விஷமும் குடிக்கவில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு வலுக்கட்டாயமாக விஷம் ஊற்றி சாகடித்து இருக்கின்றனர். அவளது கழுத்தில் நகக்கீறல்கள் இருந்தன. அது மறைக்கப்பட்டு இருக்கிறது.

  ஆதாரம் ஏதுமில்லை

  ஆதாரம் ஏதுமில்லை

  இந்த சம்பவத்தால் என் மகன் மனநிலை பாதித்து இருக்கிறான். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவன் மீளவில்லை. இதுவரை போலீசார் ஒரே ஒரு ஆதாரத்தைக்கூட சேகரிக்கவில்லை.

  ஆண்டவன் தண்டிப்பான்

  ஆண்டவன் தண்டிப்பான்

  காதலன் என்று சொல்லப்பட்டவர், தன் உதட்டில் விஷத்தை தடவிக்கொண்டு, மயக்கம் அடைந்தது போல் நடித்து இருக்கிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விடுதலை ஆகலாம். ஆனால், எனக்கு ஏற்பட்ட மன வலியும், ஆண்டவனும் அவர்களை நிச்சயம் தண்டிப்பார்.

  நீதி கேட்டு போராட்டம்

  நீதி கேட்டு போராட்டம்

  என் மகள் அணிந்திருந்த உடையையும் என்னிடம் கொடுக்கவில்லை. சம்பவம் நடந்து 15 வருடங்கள் ஆகிறது. யாருமே எனக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுக்கவில்லை. நான் தனியாக நீதி கேட்டு போராடிக் கொண்டிருக்கிறேன்.

  எனக்கு யாருடைய ஆதரவும் இல்லை என பிரதியுஷாவின் அம்மா கதறி அழுதார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Pratyusha along with her boyfriend Siddharth Reddy was said to have consumed poison as parents objected to their marriage. While her boyfriend survived, she left this world forever.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற