டிடிவி தினகரன் தரப்பு ஆட்சேபம் - இரட்டை இலை சின்னம் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை சின்னம் மீதான வழக்கு நவம்பர்1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள் குறித்து டி.டி.வி.தினகரன் தரப்பு ஆட்சேபம் தெரிவித்ததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினகரன் தரப்பு எதிர்ப்பால் வழக்கு விசாரணை தாமதம் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் இபிஎஸ்-ஓபிஎஸ், டிடிவி தினகரன் அணியினர் பங்கேற்றனர். அமைச்சர் ஜெயக்குமார், கே பி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். இன்றைய விசாரணையில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் காரசாரமான விவாதங்களை முன்வைத்தார்.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டது. ஆர்.கே. நகர் தேர்தலின் போது சின்னத்திற்காக ஓபிஎஸ், சசிகலா அணிகள் மோதியதால் கட்சியின் பெயரையும், தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையிலும் வழக்கு விசாரணை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கில் ஆவணங்கள்

லட்சக்கணக்கில் ஆவணங்கள்

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று சசிகலா தலைமையிலான அணியினரும், ஓபிஎஸ் தலைமையிலான அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் லட்சக்கணக்கில் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள்

ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள்

சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அந்த அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் வந்தது. பின்னர் அந்த அணியும், ஒபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. சசிகலா அணியின் ஒரு பிரிவினர் துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறார்கள்.

சின்னத்திற்கு உரிமை

சின்னத்திற்கு உரிமை

ஓபிஎஸ்,ஈபிஎஸ் அணியினர் ஒன்றாக இணைந்து தற்போது இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோருகிறார்கள். இதேபோல் டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படும் அணியினரும் உரிமை கோருகிறார்கள்.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

இந்நிலையில் இரட்டை இலை யாருக்கு என்பது தொடர்பாக அக்டோபர் 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தீவிரமாக களத்தில் இறங்கின. இபிஎஸ்-ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் அணியினர் போட்டி போட்டு பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.

தேர்தல் ஆணையத்தில் விசாரணை

தேர்தல் ஆணையத்தில் விசாரணை

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றிய இறுதி முடிவு செய்வது குறித்து இரு அணிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் கட்ட விசாரணை கடந்த 6ம் தேதி இந்திய தேர்தல் அதிகாரி எ.கே.ஜோதி தலைமையில் தொடங்கியது. இரண்டாம் கட்ட விசாரணை 13ம் தேதி நடந்தது. 3ம் கட்ட விசாரணை கடந்த 23ம் தேதி தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணையர், இரட்டை இலை சின்னம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அக்.30ல் விசாரணை

அக்.30ல் விசாரணை

இந்த நிலையில் அடுத்தகட்ட விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணையில் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் டெல்லியில் உள்ள மைத்ரேயன் எம்பியும் விசாரணையில் பங்கேற்றார். இதே போல, தினகரன் அணியினரும் விசாரணையில் பங்கேற்றனர்.

இரட்டை இலை யாருக்கு?

இரட்டை இலை யாருக்கு?

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அந்த கெடுவுக்கு ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இதனால், இன்று நடைபெறும் விசாரணை இறுதி விசாரணையாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உண்மையான அதிமுக

உண்மையான அதிமுக

இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அந்த அணியே உண்மையான அதிமுகவாக கருதப்படும். அவர்களுக்கே அதிமுக பெயர், கட்சி அலுவலகத்தை பயன்படுத்தும் உரிமை கிடைக்கும். இரட்டை இலை சின்னம் கிடைத்தால் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் எடப்பாடி, ஓ.பி.எஸ்.தரப்பினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

யாருக்கு கிடைக்கும் சின்னம்

யாருக்கு கிடைக்கும் சின்னம்

இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்று தினகரன் தரப்பு கூறி வருகிறது. ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினருக்கு கிடைத்தால் நீதிமன்ற படியேறவும் தயராக இருக்கிறதாம் தினகரன் தரப்பு. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்றும் சின்னத்தை கைப்பற்ற போவது யார் என்பதுதான் இப்போதைய பரபரப்பு. அதே நேரத்தில் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்குமா? அல்லது துளிர்க்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Election Commission hearing on the case of which AIADMK faction should be allowed to be use the ‘two leaves’ party symbol.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற