எந்த பொருளுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி? முழு விவரம் இதோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மறைமுக வரி விதிப்புகளை ஒழித்துவிட்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுக்க ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஜிஎஸ்டி வரி விதிப்பால், விலைவாசி ஏறுமா, குறையுமா என்ற விவாதங்கள் ஒருபக்கம் நடந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால், விலைவாசி சிறிது இறங்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒவ்வொரு பொருளிலும் எப்படியெல்லாம் விலைவாசி மாற்றம் இருக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள அந்தந்த பொருட்கள் மீதான வரி விதிப்பு குறித்து தெரிந்திருப்பது நல்லது. இதுகுறித்த ஒரு விளக்கம்.

வரி இல்லை

வரி இல்லை

குங்குமம்-பொட்டு, ஸ்டாம்புகள், நீதித்துறை சார்ந்த பேப்பர்கள், பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள், செய்தித்தாள்கள், கண்ணாடி வளையல்கள், கைத்தறி, மெட்ரோ பயணம், லோக்கல் ரயில், ஃப்ரெஷ் இறைச்சி, பதப்படுத்தப்படாத மீன், பதப்படுத்தப்படாத சிக்கன், முட்டைகள், பழங்கள்-காய்கறிகள், உப்பு, மோர், பால், தயிர், பிரெட், மாவு, பருப்பு, தேன். இந்த பொருட்களுக்கு வரி விலக்கு உள்ளது.

5 சதவீத வரி

5 சதவீத வரி

கிரீம்-மில்க் பவுடர், பன்னீர், பீட்சா பிரெட், ரஸ்க், சபுதானா, டீ, காபி, மசாலா பொருட்கள், மருந்துகள், ஸ்டென்ட், கேன், பீட் சுகர், ஃலைப் போட்டுகள், மண்ணெண்ணை, நிலக்கரி.

12 சதவீத வரி

12 சதவீத வரி

பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட்டுகள், ஏசி வசதியில்லாத ஹோட்டல்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பணி ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

18 சதவீத வரி

18 சதவீத வரி

ஃப்ளேவர் செய்யப்பட்ட சுகர், பாஸ்தா, கார்ன்பிளேக்ஸ், பேஸ்ட்ரிஸ்-கேக்குகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஜாம்-சாஸ், சூப், இன்ஸ்டன்ட் உணவு மிக்ஸ், ஐஸ் கிரீம், மினரல் வாட்டர், எல்பிஜி ஸ்டவ், ஹெல்மெட், டிஷ்யூ பேப்பர், மாதவிடாய்க்கான நாப்கின்கள், என்வலோப் கவர்கள், நோட்டு புத்தகங்கள், இரும்பு பொருட்கள், பிரிண்ட் சர்க்கியூட்கள், கேமரா, ஸ்பீக்கர்கள், மானிட்டர்கள், எலக்ட்ரானிக் பொம்மைகள்.

28 சதவீத வரி

28 சதவீத வரி

சுயிங்கம், சாக்லேட், வேஃப்ல்ஸ், வேஃபர்ஸ், பான் மசாலா, குளிர்பானங்கள், பெயிண்ட், ஷேவிங் கிரீம்கள், வாசனை திரவியங்கள், ஆப்டர் ஷேவ் லோஷன்கள், ஷாம்பு, ஹேர்டை, சன்ஸ்க்ரீன், வால்பேப்பர், டைல்ஸ், வாட்டர் ஹீட்டர், டிஷ்வாஷர், எடை பார்ப்பு மெஷின், வாஷிங் மெஷின், ஏடிஎம், வேக்யூம் கிளீனர், ஹேர்கிளிப், ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் சைக்கிள்கள்.

சேவைகளுக்கான வரி

சேவைகளுக்கான வரி

பல்வேறு சேவைகளுக்கும் வரி விகிதம் மாறுபடும். மதுபான லைசென்ஸ் வைத்துள்ள ஏசி ஹோட்டல்கள், டெலிகாம் சேவைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி), நிதி சேவைகள், பிராண்டட் கார்மெண்ட்ஸ் ஆகியதுறைகள் மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.

28 சதவீத வரி

28 சதவீத வரி

ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ரேஸ்கிளப் பெட்டிங், சினிமா டிக்கெட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஸ்டார் ஹோட்டல்களிலுள்ள ஏசி ரெஸ்டாரண்டுகள் உட்பட அனைத்து வகை ரெஸ்டாரண்டுகளுக்கும், ஒருநாள் வாடகை ரூ.75000 வரையிலான ஹோட்டல் அறைகளுக்கும் வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை மேற்கிந்திய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் வரவேற்றுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Hotel and Restaurant Association of Western India (HRAWI) on Wednesday welcomed the revised goods and services tax (GST) slab on hotel room tariffs.
Please Wait while comments are loading...