மே. வங்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து: 3 அதிகாரிகள் பலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தின் சுக்னாவில் உயர் அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் உயர் அதிகாரிகள் 3 பேர் உயிரிழந்தனர்.

சுக்னா என்ற இடத்தில் இந்திய ராணுவ அதிகாரிகள் 4 பேருடன் சென்ற சீட்டா ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

Army chopper crashed : 3 officials killed

விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு உயிருக்கு போராடிய அதிகாரியை மீட்ட மீட்புக்குழுவினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

5 இருக்கைகளை கொண்ட இந்த சீட்டா வகை ஹெலிக்காப்டர் அதிக ஈர்ப்பு விசை உள்ள இடங்களிலும் அதிக உயரத்திலும் பறக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்ததாக ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Army's cheetah chopper crashed in sukhna near Westbengal. Three officials killed in this accident. one rescued with severe injuries.
Please Wait while comments are loading...