ராணுவ அதிகாரியை அடித்து நொறுக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்: அதிர்ச்சி வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ராணுவ அதிகாரியை கொடூரமாக தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்- வீடியோ

  சுரு: ராஜஸ்தானில் ராணுவ அதிகாரி ஒருவரை சுங்கச் சாவடி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

  ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் உள்ள தாதார் பகுதியில் சுங்கச் சாவடி ஒன்று செயல்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை ராணுவ அதிகாரி ஒருவர் அந்த சுங்கச்சாவடி வழியாக சென்றுள்ளார்.

  Army officer gets attacked in Toll Plaza

  தனது அடையாள அட்டையை காண்பித்து தான் ஒரு ராணுவ அதிகாரி என்றும், வரி செலுத்துவதில் இருந்து விலக்கு வேண்டும் என்றும் அவர் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.

  அதற்கு அவர்கள் யாராக இருந்தாலும் வரி செலுத்திவிட்டு தான் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் வரி விலக்கு கேட்ட ராணுவ அதிகாரியை சுங்கச்சாவடி ஊழியர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

  இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Toll plaza employees attacked an army officer in Churu district of Rajasthan after he asked for toll waiver. The shocking incident was caught on CCTV camera over there.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற